பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

159

களைத் தாக்க முனையும் கொடிய புலியைக் காணும் புள்ளி மான்கள் உயிருக்கஞ்சி ஒடி ஒளிவதைப்போல் செய்யிதத் தெனும் வீரத் திருவுருவைக் கண்ட மாத்திரத்தில் எதிரிப் படையினர் இருக்குமிடம் தெரியாது பாய்ந்தோடி மறைந்தனராம்.

"எறிந்தகல் வரவு கண்டங்கு

எழுந்தகல் காகம் போலும்

பறந்தசெம் பருந்தைக் கண்ட

பஞ்சுகம் வெருணட போலும்

மறந்திகழ் புலியைக் கண்ட

மானினம் வெருண்ட போலும்

தறிந்துயிர் போய்வெ ருண்ட

தரியலர் ஓடினாரால்"

என எளிய உவமைகளின் துணைகொண்டு வீரத்திருமகள் செய்யிதத்தின் வீரப்பெருக்கையும் , அடலேறுபோல் போர்க்களத்தே பொருது நின்ற காட்சியையும் அவரது வீரத்திற்கு முன்னால் அபுசுப்யானின் வீரப்படை கோழை போல் அஞ்சியோடிய காட்சியையும் நம் கண்முன்னே வந்து காட்டி விடுகிறார்.

இறைநெறி போற்றும் இஸ்லாமியப் படைக்கும் எதிரி அபுசுப்யானின் பெரும் படைக்குமிடையே நடந்து உக்கிரமான போரில் இறுதியில் இறை நெறிப் படையே வெல்கிறது. தீனநெறிப் படையினர் விழுப்புண் பல பெற்று வெற்றிக் கொடி நாட்டுகின்றனர். அதுவே இஸ்லாத்தின் பெரும் வெற்றியாக அமைகிறது.

வெற்றிப் பெருமிதத்தோடு அப்துர் ரஹ்மானும் செய்யிதத்தும் அசுமத்தின் மகனும் முர்ரத்தும் மதினா சென்று இஸ்லாத்தின் வெற்றிக் கனியைப் பெருமானருக்கு காணிக்கையாக்கி ஆசி பெறுகின்றனர். தீன்வழி திரும்பிய மகனையும் மருமகளையும் பெற்று மகிழ்ந்தனர் அருமைத்