பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162


அரவம்மிஞ்சிய கடல் அமைந்திட
ஆர்த்த டர்ந்தன சேனையே”

எனக்கூறி அக்காலத்தில் வழக்கிலிருந்த இசைக்கருவிகளையெல்லாம் நம் மனக் கண்முன் வரிசையாக வந்து தோற்றமளிக்கச் செய்துவிடுகிறார்.

சல்காப் படைப்போர் இலக்கியம் போன்றே இச்செய்யிதத்துப் படைப்போர் இலக்கியத்திலும்பெருமானாருக்கே எல்லா வகையிலும் முக்கியத்துவம் தந்து பாடியுள்ளார் ஆசிரியர். பெருமானாரின் பெருமையை, அருள் உள்ளத்தை, கருணைத் தன்மையை தீயன கண்டு வெகுண்டு அதனைப் போக்கத் துடிக்கும் துணிவை, இறை நெறி பேணிப் பரப்புவதல்காணும் மனத் திட்பத்தைப்பற்றியெல்லாம் சிறப்பித்துப் பாடுவதன் மூலம் இலை மறை காயாக பெருமானாரையே காப்பிய நாயகராக அமைத்துள்ளார் எனில் அஃது மிகையன்று உண்மை.

தமிழ்நாட்டுச் சூழலில் அரபு நாட்டை அமைத்துக் காப்பியம் பாடி வெற்றி கண்டவர் புலவர் குஞ்சுமுசு ஆலிம் லெப்பையவர்கள். அவரது படைப்புகளாக 'சல் காப் படைப்போர்’ படைப்பிற்கும் மூல நூலாக அமைந்தது ஹலரத் ஹசனுல் பிஸ்ரி (ரஹ்) அவர்களின் அரபி மொழி நூல்களாகும். அவற்றின் தழுவல்களாக எழுந்தவையே இவ்விரு நூல்களும் என்பது இங்குக் குறிப்பிடத் தக்க செய்தியாகும்.

பிற படைப்போர் இலக்கியங்களில் காண்பதுபோன்றே இஸ்லாமிய வரலாற்றுச் சாயல் இவற்றில் தென்படினும், நாயகத் திருமேனியின் பெயரும் அவர்தம் அருமைத் தோழர்களின் பெயர்களும் அன்பர்கள் சிலரின் பெயர்களும் இஸ்லாத்தின் எதிரிகளான அபுசுப்யான் போன்றோர்களின் பெயர்களும் தாராளமாக இவற்றில் இடம்-