பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164



களத்தே காசீம் எனும் கட்டிளங்காளை எசீதின் எதிரிப் படைகளோடு வீரப் போரிட்டு மடிந்த சோக வரலாற்றை சுவைபட விரித்துரைக்கிறது.

மக்களாட்சி முறையில் ஆட்சித் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்த இஸ்லாமிய ஆட்சி முறைக்கு முற்றிலும் மாறுபட்டதாக அரேபியாவின் சர்வாதிகார ஆட்சித் தலைவராகத் தன்னை அறிவித்து முடிசூட்டிக் கொண்ட எசீதின் கொடுங்கோலாட்சியை எதிர்த்து அண்ணலார் போதித்த, அவர்தம் அருமைத் தோழர்களால் கடைப் பிடிக்கப்பட்ட மாநிலம் போற்றும் மக்களாட்சி முறையை மீண்டும் நிலைநாட் ட போருக்கெழுகிறார் அண்ணல் நபியின் அருந்தவப் பேரர் ஹூசைனார். கூஃபா மக்களின் பேராதரவை நம்பி எழுபத்திரண்டு பேர்களுடன் யூப்ரட்டீஸ் நதிக்கரையில் கர்பலா எனுமிடத்தில் தங்கியிருக்கும் ஹூசைனாரின் சிறுபடையை எதிர்பாரா நிலையில் நாலாயிரம் பேர் கொண்ட உமறு இப்னு சஆதின் பெரும் படை தாக்குகிறது. சற்றும் எதிர்பாரா நிலையில் வந்து போதிய எசீதின் படையை எதிர்துக் கொடுஞ்சமர் புரிந்தனர். இமாம் ஹூசைனின் சிறு படையினர. மக்களாட்சி முறையை மீண்டும் மலரச் செய்வதில் அசைக்க முடியா உறுதிகொண்ட ஹூசைனாரின் கூட்டத்தார், ஏற்பட்ட பெருஞ் சேதத்தைக் கண்டு சிறிதும் கலங்காது இறுதிவரை போரிடுகின்றனர். இதில் நரர் புலி அலி (ரலி) அவர்களின் அருமைப் பேரரும் இமாம் ஹசனாரின் மகனுமான காசீம் எனும் கட்டிளங்காளை காண்போர் வியக்கும் வண்ணம் எதிரிகளோடு போரியற்றிய நிகழ்ச்சிகளைப் பெரிதும் விவரிக்கிறது ‘காசீம் படைப்போர் இலக்கியம்’ இதனைப் பற்றிக் கூறும் நூலாசிரியர்,

“காரணன் தூதரான ஹபீபுல்லா மருகரான
நேரணி அலியார் மைந்தர் நிறைந்த கண்மணியாய்
வந்த