பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

ஆனால், திரு மணவை முஸ்தபா அதிலே புகாதது நாம் புரிந்துகொள்ளக் கூடியதுதான்.

இலக்கிய ஆய்விலிருந்து பிறழ்ந்து அரசியல் பாதைக்குச் செல்லாமல், சமய நிலையில் காலூன்றி நின்று எடுத்துக் கொண்ட பொருளிலே கருத்தைச் செலுத்திருக்கிறார்

இந்த நூல் முழுவதையும் படித்து முடித்தாலே இஸ்லாமியப் புலவர்களின் தமிழ்ப் பணியும் சமயப் பணியும் ஒருவாறு நமக்குப் புலபபட்டு விடும்.

இஸ்லாமானது உலகந்தழுவிய மதமாயினும் மதவழிப்பட்ட கலாசாரத்திலே இஸ்லாமியத் தமிழருக்கு வேத மொழி என்று ஒன்று உண்டாயினும், தமிழ் மொழிக்குரிய இலக்கண இலக்கிய மரபுகளைக் கடைபிடித்து தேங்கள் சமய நூல்களைப் படைத்திருககிறார்கள் என்பதனை இந்நூலாசிரியர் மிகவும் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள் என்று நினைக்கும், போது, மிகுதியும் அரபுச்சொற்கள் கலந்த மணிப்பிரவாளமாகத்தான் இருக்கும் என்ற ஐயம் சிலருக்கோ பலருக்கோ தோன்றத்தான் செய்யும். ஆனால் அந்த ஐயம் பொய்யானது என்பதனைப் புலப்படுத்த இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் படைத்த இலக்கியங்களிலிருந்து ஏராளமான செய்யுட்களை எடுத்துக்காட்டியிருக்கிறார் நூலாசிரியர்.

இந்த நூல் நல்ல தமிழ் நடையில் எழுதப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய இலக்கியம் பற்றியதாயினும், பொருளைப் புரிந்து கொள்ள முடியாதபடி, பிற மொழிச் சொற்கள் அதிக அளவில் கலந்திருக்கவில்லை.

தமிழ் மொழியில் ஆதிவரலாறு இஸ்லாத்தின் வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதாகும். அகத்தியம் தொல்காப்பியம் ஆகிய இலக்கணங்களும் பத்துப்பாட்டு-எட்டுத்தொகை ஆகிய சங்ககாலத் தொகை நூற்களும், இடைக்காலத்தில் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களும்