பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

171

டில்லிப் பேரரசை மாமன்னர் அவுரங்கசீப் ஆலம்கீர் அவர்கள் ஆண்டு வந்தபோது. 1689 ஆம் ஆண்டில் மாமன்னரின படை மராட்டிய மன்னர் பொறுப்பிலிருந்த இராமராயர் செஞ்சிக் கோட்டையில் தஞ்சமடைந்தார். மாமன்னர் அவுரங்கசீப்பின் படைத் தளபதியான துல்பகார்கான், இராமராயர் தஞ்சம் புகுந்திருந்த செஞ்சிக் கோட்டையை முற்றுகையிட்டார். இந்த வரலாற்று நிகழ்ச்சி இந்நொண்டி நாடகத்தில்,

"ஆகரை நகர்புரக்கு-மனுமதி
அவரங்கு சேகுசாய் பருட்படியே
சேகர மாகக் கூடி-ஒசீருகள்
தெக்கண திசை முற்றுந் திறை கொள்ளவே"

எனக் கூறப்படுகின்றது. இச்சான்றிலிருந்து இந்நூல் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் எனத் துணிய முடிகிறது

'செய்தக்காதி நொண்டி நாடகம்' 224 நொண்டிச் சிந்துகளால் இயற்றப்பட்டுள்ளது. புதுவகை இலக்கிய வடிவமான இந்நொண்டி நாடகம் எழுதப்பட்டதன் நோக்கத்தை இந்நூலாசிரியர் காப்புச் செய்யுளில்,

"கண்டவர்கள் கொண்டாடும் கன்னன்
                                            வகுதையில்வாழ்
மண்டலிகன் பெரியதம்பி மரைக்காயன்
                                            அருளுதித் தோன்
கொண்டவர்கள் கலிதீர்க்குங் குருசெய்தக்
                                            காதிதன்மேல்
கொண்ட வர்கள் கலிதீர்க்குங் குருசெய்தக்
                                           காதிதன்மேல்
மொண்டிநா ட கத்தைப் பாட முதல்வனே
                                           காப்புத்தானே"