பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

எனக் கூறி தெளிவுபடுத்துகிறார். வள்ளன்மை மிக்கவராக செல்வச் செழிப்புடன் காயலில் பிறந்து கீழக்கரை யில் மன்னராக ஆட்சி செலுத்தி, அவுரங்கசீப் ஆலம்கிரின் அன்பான அரவணைப்பில், தமிழ்ப் புலவர்களை போற்றி வாழ்ந்த செய்குஅப்துல்காதர் எனும சீதக்காதியின் பெரும் புகழை வள்ளன்மையை, இறைவழியில் உய்த்துணர வழி காட்டிய பெருங்குணத்தை விதந்தோதுவதே நூலின் நோக்கமாக அமைகிறது.

'செய்தக்காதி நொண்டி நாடகம்' முழுவதுப் இனிய சந்தப் பாடல்களாலாகியது என அறிவோம். 'நொண்டி’ பாத்திரத்தின் தன்மைக்கொப்ப அவன் பாடும சந்தச்சீரும பாடும்போது இடையிடையே தடைபடுவது போன்று ‘விட்டிசைத்தல்' முறையில் புனையப்பட்டுள்ளது. இனிமை பாகப் பாடுவதற்கேற்ற சந்தச் சீர்மை கொண்டவை இப்பாடல்கள்.

"நொண்டி நாடகம் ஒரு கேயப் பிரபந்தம் (இசைப்பாட்டு) ஆகும் இதிலுள்ள சிந்துகளெல்லாம் பாடுவதற்காகவே ஏற்பட்டவை. சந்தத்தின அமைப்பு முதலிலாயினும், ஈற்றிலாயினும சொற்கட்டுகளின மூலமாக விளக்கப்பட்டிருககும். ஒவ்வொரு சிந்திலும் நொண்டியான சீர் முதல் வரியாயினும், இரண்டாம் வரியிலாயினும் அல்லது ஈற்று வரியிலாயினும் காணப்படும். நொண்டிச் சீரின் கால அளவிற்கு முந்தின சுரத்தின் இசையே பாடப்படும்" என்பர் ஜனாப் முஹம்மது ஹ-லைன் நயினார் அவர்கள்.

மேலும் அவரே செய்தக்காதி நொண்டி நாடகம் ஒரே வர்ண மெட்டான சிந்துவில் பாடியிருப்பது எத்துணைராகச் சிறப்புடையதாக விளங்குகிறது என்பதை விளக்கும் போது

"சீதக்காதி நொண்டி நாடகத்தில் பூபாளம் நாதநாமக்கிரியை, மோகனம் என்னும் மூன்று ராகங்கள் காணப்படுகின்றன. இவை மனோ ரம்மியமான ராகங்கள். பாட்டுக்கள்