பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

173

ஆதி தாளத்தில் அமைக்கப்பட்டிருப்பது மிக்க பொருத்தமாகும்" என மேலும் கூறியுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.

இசைச் சிறப்புடன் கூடிய இந்நாடகம் சாதாரண மக்களும் எளிதில் புரிந்து சுவைக்கும் வண்ணம் எளிமையான சொற்களால் பாடப்பட்டுள்ளது. மக்களின் அன் றாட வாழ்வில் மிகுதியும் பயன்பட்டு வரும் சொற்களே இந்நூலில் அதிகம் இடம் பெற்றுள்ளன.

தனி நடிப்புப் போக்கில் அமைந்துள்ள இந்நாடகத்தைக் கேட்டு, பார்த்து அனுபவிக்கும் மக்களுக்கு சலிப்பேற்படா வண்ணம் ஆங்காங்கே நகைச் சுவையூட்டும் வண்ணப் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன.

தமிழ் மொழி நெறிமுறைக்கேற்ப முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் தங்கள் தமிழ் இலக்கியப் படைப்புகளை காப்புச் செய்யுள் இறைவணக்கம், நபிமுதலாகவுள்ள பெரியார்கள் வாழ்த்து என்று அமைப்பது வழக்கம். அம் முறையிலேயே இந்நொண்டி நாடகக் காப்புச் செய்யுள், பெரியார் வாழ்த்துப் பகுதிகளை முறையாக எட்டுப் பாடல்களில் ஆசிரியர் அமைத்துப் பாடியுள்ளார்.

அடுத்து, நொண்டி தன் வரலாற்றை தானே விரித்துரைக்குமுன், சபையோர்களை முன்னிலைப்படுத்தி தன் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் முறையில் பதினான்கு பாடல்களில் முன்னுரையாகச் சில செய்திகளைச் சொல்லி, பின் தன் வரலாற்றைச் கூறுகிறான்.

"சோலைமலை எனும் ஊரைச் சேர்ந்த வணங்காப்புலி என்பானின் மகன் ஒழுங்காப்புலி என்பது என் பெயர் எல்லா வித களவுகளும் தெரியும். வஞ்சனை முதலாகவுள்ள களவு உத்திகளையெல்லாம் கற்றறிந்த பின்னர் மதுரையில் குடி கொண்டுள்ள சொக்கநாதரைக் கும்பிடச் சென்று கொடி