பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

மரத்தடியில நின்று வணங்கும்போது விலைமாது ஒருத்தி தன் பால் கவர்ச்சி காட்டி ஈர்த்தாள். அவளோடு சென்று ஒரு திங்கள் வாழ்ந்தபோது கைப்பொருளெல்லாம் கரைந்து போய் விடடது. இதனால் விலைமாதின் தொடர்பு அறுந்தது. பொருள் தேடும் வேட்கையோடு திண்டுக்கல்லை அடைந்த போது களவுத் தொழில் நண்பனான சிங்கனன் என்பானைச் சந்தித்து அவளோடு ஒரு நாள் தங்கி மறுநாள் திருச்சியை அடைந்தேன்

காவிரியில் குளித்து சீரங்கத்துத் திருமாலை வணங்கி ஐந்தாறு நாட்கள் அங்கே தங்கியிருந்தபோது திருப்பதித் திருடன் ஒருவனைச் சந்திக்க நேர்ந்தது. இருவரும் கூட்டாகச் சேர்ந்து, திட்டமிட்டு ஒருநாள் இரவு விலைமாதின் வீடுகளில் தனித்தனியே தங்கினோம். நள்ளிரவில் விலைமாதுக்கு மயக்கப் பொடி தூவி அவள் சேர்த்து வைத்திருந்த நகைகளையெல்லாம் திருடிக்கொண்டு வெளியேறி விட்டேன். அவ்வாறே திருப்பதித் திருடனும் வேறொரு விலைமாதின் நகைளைத் திருடிவந்தான்.

செஞ்சிக் கோட்டையை நெருங்கியபோது கோயில் பூசாரி ஒருவனது நட்பு எனக்குக் கிடைத்தது. அவன் எனக்கு உணவும் உறையுளும் தந்து ஆதரித்தான். அவனிடம் நான், திருடி வந்த பொருள்களையெல்லாம் அடைக்கலமாகத் தந்து விட்டு நாலைந்து நாட்கள் அங்கேயே தங்கியிருந்தேன்

அச்சமயம் மொகலாய சேனை செஞ்சிக் கோட்டையை முற்றுகையிட்டிருந்தது. மொகலாயச் சக்கரவர்த்தி அவுரங்சீப்பின் தளபதி துல்பர்கான் என்பவர் பெரும் படை கொண்டு முற்றுகையிட்டிருந்தனால் எங்கும் ஒரே கெடுபிடியாக இருந்தது

மொகலாயப் படை தங்கியிருந்த பாடி வீட்டினுள் புகுந்து திருட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.