பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

177

உய்தி பெற்றது தொழுதேன். நோன்பு நோற்றேன், தானம் செய்தேன். திருட்டுத் தொழில் சிந்தனை அறவே என்னை விட்டொழிந்தது. நல்லுணர்வு மிக்கவனாக, செய்த தவறுகளுக்கும் பாவங்களுக்கும் மன்னிப்பு வேண்டி வல்ல அல்வாஹ்விடம் மன்றாடினேன்.

எனக்குள் ஒரு பேராசை எழுந்தது. புனித பூமியாகிய மக்கா இறையில்லம் சென்று, இறைவணக்கம் புரிய வேண்டும் என்பதே அது. என விருப்பத்தை வள்ளல் செய்தக்காதியிடம் சமயமறிந்து வெளியிட்டேன். இல்லையெனாது வாரிக் கொடுக்கும் வள்ளல் தன் வணிகக் கப்பல் மூலம் மக்கமா நகர் செல்ல ஏற்பாடு செய்தார்.

மக்கா இறையில்லம் சென்று தொழுது மகிழ்ந்த நான் மதினா சென்று தொழுது. நான் செய்த பாவங்களுக்கெல்லாம் மன்னிப்புக் கேட்டு இறைவனிடம் மன்றாடி கண்ணீர் விட்டுக் கதறியழுதேன். பின்பு அங்கேயே அயர்ந்து தூங்கி விட்டேன்.

மறுநாள் காலை விடிந்தபோது எழுந்தேன். என்ன அதிசயம்! என்னாலேயே நம்ப முடியவில்லை. வெட்டப்பட்டிருந்த காலும் கையும் வளர்ந்து முன்பு போலிருந்தன இறைவனின் கருணையை எண்ணி உருகினேன். தொழுது வணங்கி நன்றி கூறிக் கொண்டேன். நான உய்ய வழி காட்டிய வள்ளல் செய்தக்காதியையும் அவரை அறிமுகம் செய்த அவர் தப்பி மாமு நபினார் மரைக்காயா அவர்களையும், நான் இறைவனின் பெருங்கருணையைப் பெற வழிகாட்டிய ஞானவள்ளல் சதக்கத்துல்லா அப்பா அவர்களையும் நன்றிப் பெருக்குடன் நினைத்து,

“காயலின் மகராயன்- செய்தக்
      காதியைத் திசைநோக்கிக் கையெடுத்தேன்
தாயென உபசரித்து-மாமுநெயினார்
     தன்னையும் நினைந்தே தாழ்ச்சி செய்தேன்,