பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

இஸ்லாம் போதிக்கும் அறநெறிகளுக்கு முரண்பட்டவையல்ல என்பதனை இந்நூலை மட்டும் படித்தாலே இஸ்லாமியரல்லாதாரும் அறிந்துகொள்ள முடியும்.

இத்தகைய அரிய நூலை இயற்றி, இஸ்லாத்துக்கும் தமிழுக்கும் உள்ள உறவை உறுதிப்படுத்தும் தொண்டில் ஈடுபட்ட என் அரிய நண்பர் மணவை முஸ்தபா அவர்களைப் பாராட்டுகிறேன்.

தமிழ் மக்கள் - எந்த சமயத்தினராயினும் இந்நூலை வாங்கிப் படித்து, இஸ்லாமியரின் தமிழ்த் தொண்டை அறிந்துகொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். அதற்கு உதவி புரிந்த திரு. மணவை முஸ்தபா அவர்களைப் பாராட்டுகிறேன்.

ம. பொ. சிவஞானம்காணிக்கை

தமிழ்ப் பணிக்கு என்னை ஆளாக்கிய என் அருமைப் பெற்றோர் பி.த. மீராசா ராவுத்தர்-சையதம்மாள் நினைவுக்கு இந்நூலைக் காணிக்கையாக்குகிறேன்.