பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

"மத்தளமுங் கைத்தாள முந் - தம்பூரு
வாத்தியங்கள் கொண்டுபலர் கீர்ததனஞ் செய்ய"

எனக் கூறுதவன் மூலம் அக்காலத்து அரசவைகளில் மிகுதியும் பயன்பட்ட இசைக் கருவிகளையும் தைத்தாள முறையையும் அறிய முடிகிறது.

இந்நொண்டி நாடகத்தின் கதாநாயகன் சமூகத்தின் மிகப்பெரும் தீங்கான திருட்டுத் தொழிலையும் வஞ்சகமாகப் பொருளை அபகரித்து வாழும் போக்கையும் கைக் கொண்டு வாழ்ந்ததோடு காம உணர்வு மிக்கோனாய் விலை மாதர் கூட்டுறவால் வறுமை வாய்ப்பட்டு அதன் காரணமாக மீண்டும் மீண்டும் திருட்டுத் தொழிலைச் செய்து, இறுதியில் கொடுந் தணடனையாக கைகால்களை இழப்பதன் மூலம் தீய பழக்கங்களும் கொடிய வறுமையுமே இத்தகைய சமூக ஒழுக்கக் கேடுகளுக்கு அடிப்படை என்பதைச் சொல்லாமல் சொல்லி விடுகின்றார் ஆசிரியர்.

கொடிய தண்டனைக்கு ஆளாகி மனம் திருந்தும் நொண்டி உய்யும் வழியாக இஸ்லாமிய நெறியை மேற்கொண்டு மக்கா, மதினா சென்று இறையருளால் இழந்த காலையும் கையையும் பெற்றதாகக் கதையை முடிக்கும் ஆசிரியர் இஸ்லாமியக் கருத்துக்களையும் தீன் நெறியையும் விளக்கிக் கூறவேண்டிய கட்டாயத்திற்காளாகிறார்.

ஆனால், இந்நூலின் தொடக்கத்திலேயே நபிகள் நாயகம், அபூபக்கர், உமர், உதுமான் ஹஸன் ஹூஸைன் முகியித்தீன் ஆண்டகை ஆகியோரின் வாழ்த்துக்களை வேண்டியும வள்ளல் செய்தக்காதி, அவர் குரு ஞான வள்ளல் சதக்கத்துல்லா அப்பா ஆகியோர் பற்றியெல்லாம் பேசுமிடங்களில் இஸ்லாமியச் சிந்தனைகளை, இஸ்லாமிய நாகரிகத்தை, ஒழுக்கத்தைப்பற்றிப் பேச நேர்ந்தபோதெல்லாம் அவற்றை முழுமையாக, ஆதார