பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

தோன்றுகின்றன. சீறாவைவிட பல இடங்களில் தரம் தாழ்ந்தும் ஒருசில இடங்களில் இணையாகவும் இருப்பதைக் கண்டுணர முடிகிறது. எனவே சீறாப்புராணம் இயற்றிய உமறுப் புலவரே இத்திருமண வாழ்த்து நூலை எழுதியிருக்க முடியாது என்றும், எட்டையபுரம் உமறு கத்தாப் எனும் வேறொரு புலவரே இத்திருமண வாழ்த்து நூலை இயற்றியிருக்க முடியும் எனத் துணியலாம்.

இந்நூலைத் தவிர வேறு எந்த இஸ்லாமிய இலக்கியத்திலும் உமறுகத்தாப் புலவரின் பெயர் குறிக்கப்படாதது கொண்டு இவர் இத்திருமண வாழ்தது நூலை மட்டுமே சீதக்காதியின் சிறப்புக்களை கூற வேண்டி எழுதியிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

இந்நூலைப் படிக்கும்போது நமக்கு வேறொரு உணர்வும் ஏற்படுகிறது இந்த நூலுள் சீதக்காதி குடும்பத்தார் பற்றிக் கூறப்படும் செய்திகளை நோக்கும்போது, இந்நூலாசிரியரான உமறுகத்தாப்புலவர் வள்ளல் சீதக்காதியின் குடும்பத்தாரோடு நீண்ட காலம் நெருக்கமான தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

செய்தக்காதி மரக்காயர் திருமணவாழ்த்து நூலுருவில் கிடைத்த போதிலும் இடையிடையே சில பாடற் கண்ணிகள் இல்லாமலும் ஒரு சில கண்ணிகளில் ஒரு சில சொற்கள் விடுபட்ட நிலயிலேதான் நூல் வெளி வந்துள்ளது. ஆயினும், நூலைப் படிப்போர்க்கு இது ஒரு பெருங்குறையாகத் தோன்றாதவாறு நூல் அமைநதுள்ளது அதன் தனிச் சிறப்பாகும்.

பிற இஸ்லாமிய இலக்கியங்கள் போன்றே இந்நூலும் இறைவனைப் போற்றியும நபிகள் நாதரையும் நான்கு கலீஃபாக்களையும் முகியித்தீன் ஆண்டகையையும் வாழ்த்துவதோடு