பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

'மாகத் தளாவு மணிக்கா வணம்பார்த்துப்
போகக்கா லேறாத பொனனைனயா
                                                  ரோர்கோடி"
வஞ்சியிடை தள்ளாட வந்து பசுங்
                                               கிள்ளையொடுங்
கொஞ்சிவிளை யாடிநிற்குங் கொம்பனையா
                                                 ரோர் கோடி"

எனக்கூறி அப்படியே படம் பிடித்துக் காட்டிவிடுகிறார் ஆசிரியர்.

இனி, மணமகனை நீராட்டி, வண்ணவணண ஆடையலங்காரம் செய்து, வாசனைத் திரவியங்களைச் சொரிந்து ஊர்வலமாக அழைத்துச் செல்கிறார்கள் மணமகன் மிடுக்காக பவனி வருவதை கூறுமிடத்து ஆசிரியர் காட்சியை விவரிப்பதில் மட்டுமா, சொல்லும் சொல்லிலேயும் கூட கம்பீரமான மிடுக்கைக் கொண்டு வந்து விடுகிறார்.

"விடவரவினுடனெளிய மிகுவடவை கெட இடறு
தடவிகட களுவமதத் தவளவெள்ளை யானை
                                                      யினான்
கொடியவிட வரவுபடக் குவடிடிய வடவை கெடத்
தொடுகடலி னகடுடையத் தோன்றுவெள்ளை
                                                      யானையினான்
திடதிடென நடவிகட செயவிசய
தடகரட மடையொழுகு தவளவெள்ளை யானை
                                                      யினான்
தடவிகட கரடகடத் தவனமது மொகுமொகெனத்
தடவிகட கரடகடத் தவள வெள்ளை யானை
                                                       யினான்"

எனக் கூறுவதைப் படிக்கும்போது படிப்போர்க்கே ஒரு முறுக்கான மிடுக்குணர்வு ஏற்பட்டு விடுகிறது.