பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

189

பலரும் புடை சூழ பவனி வரும் மணமகனைப் பற்றிக் கூறும்போது அங்கு இசைத்து வரப்பட்ட இசைக் கருவிகளைப் பற்றிய பெரிய பட்டியலையே தந்து விடுகிறார் ஆசிரியர்.

"திமிலி தடாரி திருமன் கனகதப்புக்
குமுறும் பதலை குடமுழவு வீராணம்
பேரிகை பம்பை பெருமுரசு மல்லாரி
பூரிகை நாகசுரம் பொங்குகடல் போல்முழங்க
ஆனைமெற் பேரி அதிருமிடி பேசற்கரங்கக்
கூனல்முது கொட்டையின் மேற் கொண்டடமா
                                                        ரம்மதிர
ஏற்றுங் குதிரையிடம் மானத் தான்கலிப்ப
வெற்றிநா கேசமென மேளமிக வார்ப்பரிப்பத்
தாரை நமரிகொம்பு சத்தமிடு மெக்காளம்
வீரகருணாவாங்கா வெண்சங்க முந்தொனிப்ப"

எனக் கூறுவதுடன் வீணை, தண்டை, கயிலாச வீணை, ருத்ரவீணை, உடுக்கை முதலான அத்தனை இசைக்கருவிகளை நம் மனக்கண்முன் கொண்டு வந்து காட்டுவதோடு அங்கு என்னென்ன இசைகள் எந்தெந்த ராகத்தில் இசைக்கப்பட்டன என்பதை,

"கண்டாரா கத்துடன் கல்யாணி காம்போதி
கொண்டல்சொரி மேகக் குறிஞ்சி சங்கராபரணம்
தோடி வராளி சுத்ததுன்னி யாசிகெளரி
பரடிசுதி கூடியிசைப் பாடகர் முன் பாடி

என அழகாகப் படம் பிடித்துக் காட்டி விடுகிறார்.

இதன் மூலம் அக்காலச் சூழலில் இத்தகைய திருமண ஊர்வலங்கள் எவ்வகைப் போக்கில் அமைந்திருந்தன என்பதை ஓரளவு நம்மால் ஊகித்துணர முடிகிறது.