பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

மாகும் ஒருவேளை அக்கால முஸ்லிம்கள் அவர்களைப் பின்பற்றி இப்பழக்கத்தைப் பேணி நடந்திருக்கலாம். பின்னர் அப்பழக்கம் அவர்களை விட்டு நீங்கியிருக்கலாம்.

இந்நூலாசிரியர் தமிழ் மக்களிடையே இருந்து வந்த பழக்கவழக்கங்களை நன்கறிந்தவராகவும் தமிழ் இலக்கியங்களிலும் இந்துப் புராணங்களிலும் நல்ல பயிற்சியுடையவராகவும் விளங்குகிறார். அதனால்தான் மன மகனையும் மணமகளையும் இராமன் போன்றோருடனும் அருந்ததி போன்றோருடனும் ஒப்பிட்டுப்பாட முடிகிறது.

அக்கால முஸ்லிம் ஆண் பெண்களின் ஆடை அணி மணிகளைப் பற்றிய துணுக்கமான விவரங்களையும் நன்கறிந்நவராகக் காணப்படுகிறார். இன்னும் அக்காலத்தில் பழக்கத்தில் இருந்த இசைக் கருவிகளையும் இசை ராகங்களையும்கூட மிக நன்றாக அறித்தவர் என்பதை, இவைகளைப் பற்றிய பட்டியலை துணுக்கமாகவும் சுவையாகவும் கூறுவதன் மூலம் அறிய முடிகிறது.

இறுதியாக மணமக்களை வாழ்த்தும்போது 'ஈசுபும் சுலைகாவும் அன்பாக வாழ்ந்ததுபோல், சுலைமான் நபியும் பல்கீசும் அழகாக வாழ்ந்ததுபோல், அண்ணல் நபிகளாரும் அன்னை கதீஜாவும் நலமுடன் வாழ்ந்ததுபோல் அலியாரும் பாத்திமாவும் வாகுடன் வாழ்ந்ததுபோல் வாழ்வீராக!' என வாழ்த்துவதன் மூலம் இஸ்லாமிய நூல் களில தனக்குள்ள மிகு பயிற்சியைப் புலப்படுத்துகிறார்.

அக்காலத் தமிழ்ப் பெருங்குடி மக்களின் வாழ்க்கைச் சூழலைத் தழுவியே முஸ்லிம் பெருமக்களின் வாழ்க்கைச் சூழல் அமைந்திருந்தது என்பதை இலைமறை காயாக விளக்குவதன் மூஸ்லிம் இரு சமுதாயத்தினருக்கு இடையே இருந்த நெருக்கத்தையும் ஒருமைப்பாட்டுணர்வையும் நம்மால் நன்கு அறிய முடிகிறது.