பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

ஏனெனில், அரபு மொழிச் சொற்களின் உச்சரிப்பை அப்படியே தமிழில் எழுத இயலவில்லை. அதோடு இஸ்லாமிய அடிப்படைக் கருத்துக்களை உணர்த்தவல்ல அரபு கலைச் சொற்களை, பொருள் நுட்பம் சிறிதும் சிதையா வணணம் தமிழில் மொழியாக்கம் செய்யவும் இயலவில்லை எனவே, திருமறை தமிழ் மொழிபெயர்ப்பை தவிர்க்குமாறு மார்க்க அறிஞர்கள் வலியுறுத்தினார்கள்.

தொடக்க காலத்தில் அரபுத் தமிழ் செம்மையானதாக அமைந்திருக்கவில்லை. பேச்சுத் தமிழையே அரபி வரி வடிவில் எழுதி வாசித்துவந்ததால் குறைகள் ஏதும்பெரிதாகத் தெரியவில்லை நாளடைவில் சற்று இலக்கியத் தரமான சொறறொடர்களை அரபி வரிவடிவில் எழுதிப் படிக்கத் தொடங்கியபோதுதான் தமிழ்மொழியிலே உள்ள ங, ச. ஞ ட,ப,ள,ழ.ண ஆகிய 8 தமிழ் எழுத்துக்களுக்கேற்ற அரபி எழுத்துக்கள் அரபி மொழியில் இல்லாதது பெருங்குறையாகப்பட்டது. மேலும் எ,ஏ,ஓ,ஒ போன்ற ஒலிக் குறியீடுகள் அரபியில் இல்லாததும் குறையாகக் கருதப்பட்டது. எனவே, இந்த எழுத்துக் குறைகளை நீக்க, சரியான உச்சரிப்பைத் தரவல்ல அரபு எழுத்துக்களை உருவாக்கவேண்டிய கட்டாயச் சூழல் அரபுத் தமிழ் வளர்ச்சியிலே ஆர்வம் கொண்டோர்க்கு ஏற்பட்டது.

ஒரு கால கட்டத்தில் சமஸ்கிருத மொழி எழுத்துக்களின் உச்சரிப்பைத் துல்லியமாகத் தமிழில் சொல்ல தமிழில் எழுத்துக்கள் இல்லை என்ற குறையைப் போக்க ஷ ஜ,ஸ,ஹ,க்ஷ போன்ற கிரந்த எழுத்துக்கள் புதிதாக உருவாக்கப்பட்டது போன்று, தமிழில் உள்ள மேற்கூறிய ங, ச, ஞ.ட ப, ள ழ, ண ஆகிய எட்டுத் தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்புக்கேற்ற புதிய வரி வடிவங்கள் அரபுமொழியில் உருவாக்கப்பட்டன. எ,ஏ,ஓ,ஒ எழுத்துக்களுக்கான ஒலிகளைப் பெற அரபி எழுத்துக்களில் மேலும் கீழும் கொம்புக் குறிகளைப் பயன்படுத்தி நிறைவு செய்யப்பட்டது இவ்வாறு