பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

தொண்ணுாற்றாறு வகை பிரபந்த வகைகளிலும் தங்கள் கை வண்ணத்தைக் காட்டியுள்ளனர் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் இவர்கள் தொடாத துறையில்லை. எடுக்காத இஸ்லாமியப் பொருளில்லை என்று கூறுமளவுக்கு தமிழுக்குரிய எல்லா வகையான இலக்கிய வடிவங்களிலும் பாடல்களைப் புனைந்து தமிழும் இஸ்லாமும் தழைக்கத் தந்துதவினர்.

அதுவரை வழக்கில் இருந்த வடிவங்களில் இலக்கியம் படைத்ததோடு புதிய புதிய இலக்கிய வடிவங்களையும் கொண்டு வந்து சேர்த்த பெருமை இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களுக்கு உண்டு. இவ்வாறு இவர்கள் தமிழுக்கென்றே சில வடிவங்களை உருவாக்கினர் அரபி, பெர்சிய மொழிகளிலிருந்தும் கொண்டு வந்து சேர்த்தனர். இவ்விலக்கிய வடிவங்கள் ஒன்று. இரண்டல்ல, எட்டு வகைகள். தமிழுக்குப் புதிய பொலிவும் வலுவும் வனப்பும் ஊட்ட வல்லன. வாகும் இவ்விலக்கிய வகைகள். அவையாவன :

1. மசலா
2. கிஸ்ஸா
3. நாமா
4. முனாஜாத்து
5. படைப்போர்
6. நொண்டி நாடகம்
7. திருமண வாழ்த்து
8. அரபுத் தமிழ்

என எட்டாகும்.

இவற்றுள் மசலா, கிஸ்ஸா, முனாஜாத்து ஆகிய மூன்று இலக்கிய வகைகள் அரபி மொழியினின்றும் தமிழுக்கு வந்து சேர்ந்த இலக்கிய வடிவங்களாகும். 'நாமா' என்ற இலக்கியப் பிரிவு பாரசீக மொழியினின்றும் தமிழ்