பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

புலவர்களின் பெயர்கள் அமைவதுண்டு. மேலும் இலக்கியத் திறமையின் அடிப்படையிலும், குறிப்பிட்ட இலக்கியப் பிரிவில் அவர்க்குள்ள தனியாற்றல், தனித்தன்மை கருதியும், அவர் பாடிய பாடலில் அவர்க்குப் புகழ் ஈட்டித் தந்த வரிகளின் பெயராலும், புலவர்களின் பெயர் அமைவது உண்டு. 'செம்புலப் பெயல் நீரார்', 'வண்ணக் களஞ்சியப் புலவர்' போன்ற பெயர்களைப் போன்றே 'ஆயிர மசலா' இயற்றிய ஆசிரியர் 'வண்ணப் பரிமளப் புலவர்' என அழைக்கப்படுகிறார். இப்பெயரிலிருந்து வண்ணம் பாடுவதில் இப்புலவர் வல்லவராகத் திகழ்ந்துள்ளார் என தெரிகிறது. இந்நூல் இயற்றப்பட்ட காலம் கடவுள் வாழ்த்துப் பாடலில் காணும் செய்திப்படி பார்த்தால் இன்றைக்குச் சரியாக 413 ஆண்டுகட்கு முன்பு 1572-ம் ஆண்டில் 'அந்தமுறு மதுரைதனிற் செந்தமிழோர் சங்கத் திலரங்கேற்றி' என கடவுள் வாழ்த்தில் குறிப்பிடுவதால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில், புலவர்கள் மத்தியில் முறைப் படி இந்நூல் அரங்கேற்றும் செய்யப்பட்டது என்பது தெளிவாகிறது. இந்நூல் 'அதிசய புராணம்’ என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது 1095 பாடல்களைக்கொண்ட இந்நூல் காப்பியப் போக்கில் அமைந்துள்ளது.

இந்நூலின் முதற் பக்கத்தில் "நபிகள் நாயகம் முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் திருவாய் மலர்ந்தருளிய ஹதீதுகள்" என்று குறிக்கப்பட்டுள்ளதிலிருந்து இந்நூலுள் கூறப்பட்டுள்ள விஷயங்கள் பெருமானாரின் வாழ்வையும் வாக்கையும் உள்ளடக்கிய ஹதீது அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

'ஆயிர மசலா' எனப் பெயரிடப்பட்டிருப்பினும் இந் நூலுள் முன்னுாறு கேள்விகள் மட்டுமே கேட்கப்படுகின்றன. எனினும் அக்கேள்விகளுக்கான விடைகளில் ஆயிரம் இஸ்லாமிய உண்மைகள் தர்க்க வாத அடிப்படையில்