பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

கள் அனைத்தின் நுட்பப் பொருள் உணர்ந்த அறிஞர் இந் நபிமார்களின் வரிசையில் இறைதூதராக இறுதி நபி பிறந்து, உலக மக்களுக்கு தீன நெறி புகட்டி நெறிப்படுத்துவார் என்பதை நுண மாண் நுழைபுலத்தோடு உணர்ந்து தெளிந்திருந்தவர். இறுதி இறைத்தூதை எதிர் நோக்கி இருந்தவர் நாயகத் திருமேனி மதினா மாநகரத்தில் இருந்தபோது ஒருநாள் வானவர் தலைவர் ஜிபுரயில் தோன்றி மதினாவுக்கு வடக்கே நெடுந்தொலைவில் வாழும் அப்துல்லா இப்னு சலாம் எனும் அறிஞர் பெருந்தகைக்கு மடல் விடுத்துத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அண்ணலார் தம் அருமைத் தோழர் உக்காஸ் என்பாரை அழைத்து வானவர் தலைவர் கோரியபடி அப்துல்லா இப்னு சலாமுக்குக் கடிதம் வரையுமாறு பணித்தார். அக்கடிதத்தில் 'இறைதூதர் முகம்மது நபி' என்று குறிக்கப்பட்டது கடிதத்தைப் பெற்ற அப்துல்லா இப்னு சலாம் இறுதி நபியை எதிர்பார்த்திருந்த நிலையில் நபியொருவர் விடுத்த கடிதம் என்பறிந்து வியந்து நின்றார். தான் வாழும் நகர மாந்தர் அனைவரையும் ஒருங்கழைத்து, கடித விவரம் கூறினார். முன்பு உலக மக்களை வழிநடத்த இறைவன் தன் துாதர்கள் மூலம் வழங்கிய மூன்று வேதங்களிலும் போதிய புலமையுள்ள அவர், மேலும் தான் தெளிவு பெற விரும்பி விடுக்கும் ஆயிரம் ஐயங்களை-மசலாக்களை-பெருமானாரிடம் கேட்பது எனவும் அவற்றிற்கு அண்ணலார் உரிய விடையளிப்பாரேயா கில் அவரே உலகம் எதிர்நோக்கி நிற்கும் இறுதி இறைத் தூதர் எனத் தெரிந்து அவர் வழியில் இணைவோம் எனவும் கூறினார்.

"பொருட்செயும் எனவே கேட்பேன்:
பூண்டெமக்கு உரைத்தாராகில்
வரும் நபி அவரே"

என முடிவு செய்து, பெருமானாரைச் சென்றடைந்தார்.