பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

அண்ணலாரிடம் "ஆயிரம் கேள்விகள் இஸ்லாமிய மார்க்கம் குறித்துக் கேட்பேன். என் கேள்விகளுக்கு உரிய விடைகளையளித்து ஐயந் தெளிவிக்க வேண்டும். உங்கள் விடைகள் எனக்கு மனநிறைவளித்தால் நானும் என் உற்றார் உறவினர்களும் என் இனததைச் சேர்ந்தவர்களும் மட்டுமல்லாது நான் வாழ்ந்துவரும் என் நகரத்தைச் சேர்ந்தவர்களும் முழுமையாக இஸ்லாத்தில் இணைவோம் எனப் பெருமானாரிடம் கூறினார். இதனைக் கேட்ட அண்ணலார் அகமகிழ்ந்து, அப்துல்லா இப்னு சலாமின் நிபந்தனைக்கு இணங்கியவராகக் கேள்வி கேட்கப் பணித்தார் அப்துல்லா இப்னு சலாம் விடுத்த வினாக்களுக்கெல்லாம் உரிய விடையை பெருமானார் அளிக்க, அதனைக் கேட்டறிந்து பெருமானாரின் உண்மைத் துாதுவத்தையும் இறைவனின் இறுதித் துரதராம் பெருமானாரின் பெரு நெறியாம் தீன் நெறியின் மகத்துவத்தையும் ஒருசேர உணர்ந்தவராக, அவரும் அவர் உற்றார் உறவினர், இன மக்கள் ஈராக கைபார் நகரத்தாரும் தீன் நெறியாம் இஸ் லாத்தைப் பின் பற்றி முஸ்லிம்களாயினர் எனும் வரலாற்றை எளிய, இனிய நடையில் காவியப் போக்கில் எடுத்துரைக்கிறது. 'ஆயிரமசலா’ எனும் இந்நூல்.

பெருமானார் இருப்பிடம் ஏகிய அப்துல்லா இப்னு சலாம். ஐயம் போக்கும் நோக்கில் அண்ணலாரைப் பார்த்து.

"துங்கமா மசலாவினுக்கு உத்தரம்
     சொல்லில் ஆதிதன் தூதுவராகுநீர்
திங்கள் வீசு உலகத்தினில்உம்முடை
     தீனிலாதொரு தீனிலையாகையால்
எங்கள் மாநகர் உள்ளர்யாவரும்
     யானும் என்னொடி ணங்கியபேர்களும்
பொங்குநற் கலிமா உரைத்திந்நெறி
    பூண்டுதீனிடை புக்குவதுண்மையே"