பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

என பெருமானாரை நோக்கி உங்களுக்கு இறைச் செய்தி எவ்வாறு எட்டுகிறது என வினவினார். அதற்கு மறு மொழியாக நபிகள் நாதர்,

"அப்படிக் கலம் இறையால் அணிபல
                                        கையில் எழுத
மெய்ப்பொருள் இசுறாபீல், மீக்காயில்
                                             தமக்கருள
செட்பிய மீக்காயீல் - ஜிபுறாயி லுக்கருள
இப்படி ஜிபுறாயில்வந் தேகி எனக்கருள்வார்"

எனக் கூறினார்.

இறைவன் தன் ஆணையைக் 'கலம்' எனும் எழுது கோல் கொண்டு மக்பூல் எனும் பலகையில் எழுத, அவ்வெழுத்தைப் படித்த இசுறாபீல் மீக்காயிலுக்குக் கூற, மீக்காயில் ஜிபுறாயிலுக்கு அருள, ஜிபுறாயில் அவ்வாணையை நபிகள் நாதருக்கு அருள, அஃது அண்ணலார் வாய்மொழியாக மக்களை வந்தடைகிறது.

சாதாரணமாக வினா - விடை அமைப்பில் வருவாகும் இத்தகைய நூல். ஒவ்வொரு கேள்வி-பதிலுக்கும் அதிகத் தொடர்பில்லாமலே அமைவதுதான் இயல்பு. ஆனால், இநநூலாசிரியர் வண்ணப் பரிமளப் புலவர். தொடக்கம் முதல் இறுதிவரை கேள்வி-பதில்களை ஒருவிதத் தொடர்போடு அமைந்திருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

'ஒன்று முதல் நூறின் உரை வரலாறு' எனும் படலத்தி ஒன்று முதல் நூறு வரையிலான எண்களை தொடர்புபடுத்திக் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையாக புனித ரமலான் மாதத்தில் இருபது முதல் முப்பது நாள் வரை நடைபெற்ற வரலாற்றுச் செய்திகளைச் சுவையாகச் சொல்லிச் செல்வது கருத்துக்கு விருந்தாய் அமைகிறது.