பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

புனித ரமளான்

20-ம் நாள் : இறைவன் தாவூது நபிக்கு சபூர் வேதத்தை அருளினான்.
21-" " : சுலைமான் நபிக்கு இறைவன் முத்திரை வந்தது.
22-" " : மூசா நபி பிறந்தார்.
23-" " : ஈசாநபிக்கு இன் ஜீல் வேதம்அருளப்பட்டது
25-" " : மூசா நபி பிர்அவ்னின் கொடுமையிவிருந்து காப்பாற்ற இஸ்ரவேலர்களை அழைத்துக் கொண்டு செங்கடலில் இறங்கினார்.
26-" " : மூசா நபிக்கு தவ்ராத் வேதம் இறக்கப்பட்டது
27-" " : யூனூஸ் நபியை கடல்மீன் விழுங்கியது.
28-" " : யாகூப் நபி குருட்டுத் தன்மை நீங்கி குணமானார்.
29-" " : இத்ரீஸ் நபி தன் உடலுடன் வானகம் ஏகினார்.
30-" " : இறைவன் மூசா நபிக்கு அறுதி கூறினான்.

இவ்வாறு ஒவ்வொரு நாளையும் ஏதேனுமொரு இஸ்லாமிய வரலாற்று நிகழ்ச்சியோடு இணைத்துத் தொடர்புப்படுத்திக் கூறியிருப்பது சுவைமிக்கதாக உள்ளது.

அப்துல்லா இப்னு சலாம் அண்ணலாரை நோக்கி விடுக்கும் வினாக்கள் சில சமயம் விடுகதைகள் போல அமைந்து படிப்போர் கவனத்தை ஆர்வத்துடன் ஈர்க்கின்றன. சான்றாக பெருமானாரை நோக்கி,