பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

"தொழுகை மறந்தவர்; சூது விரும்பியோர்; வட்டி வாங்கியவர்; வழிகெட நின்றவர்; ஆண்டவனுக்கு அஞ்சாதவர்; பொய் பேசியவர்; புறங்கூறியவர்; உருவ வழிபாடு செய்தவர்; உண்மையில் பிறழ்ந்தவர்; இபுலீசின் (சைத்தான்) மாயையில் மகிழ்ந்தவர்; சகுனம், குறி பார்த்தவர்: ஈமான் (இறை நம்பிக்கை) ஏற்காதவர்; உள்ளத்தில் நஞ்சு கொண்டு உதட்டில் இனிப்பாயப் பேசியவர்; ஒப்பாரி வைத்து அழுதவர்: மார் அடித்துக் கொண்டவர்' ஆண்டவனை ஏசியவர்; எத்தீம்களை (அனாதைகளை) நோக வைத்தார்; ஜக்காத்து (ஏழைவரி) வழங்காதவர்; கூத்துப் பார்த்தவர்; மது உண்டவர்; வெகுளியுற்றவர்: சூரியனை வணங்கியவர்; அறிவு நெகிழ்ந்தவர்; அதபு (நல்லொழுக்கம்) கடந்தவர். பிழை செய்தவர்; தாய் தந்தையர் மனம் நோகச் செய்தவர், பேயொடு உறவு பூண்டவர்; சேயொடு பகை கொண்டவர்; கோள் சொன்னவர்; வீண் மொழி பேசியவர்; வெள்ளி, திங்களில் அழுதவர்; உஸ்தாதைப் (ஆசிரியர்) பழித்தவர்; கணவன் மனத்தை நோகச் செய்தவர்; கணவன் சொற்கேளாது தன் சொற்படி கணவனை நடத்தும் சேடியர்; கணவன் உத்தரவின்றி அயல்மனை சென்றவர்; அயல் ஆடவனை நயந்தவர்; அயலார் முன் தோளும் தலையும் தோன்றத் திறந்த ஆடை அணியும் பெண்டிர் சொந்த மனையில் செட்டுச் செய்யும் பெண்கள்; காபிர் (இறைவனை நிராகரிப்பவர்) வழி நடப்பவர்; அவையில் அடாத சொல் பேசியவர்; ஒருவர் இறந்த பின் அவரைப் புறஞ்சொன்னவர்; கணவன் பொருளைக் காரணமின்றிக் கண்டோர்க்கு ஈபவர்; துணைவன் பணத்தைத் திருடும் பெண்டிர்; முனாஃபிக் (நயவஞ்சகன்) ஆனவர். அல்லாஹ்வை இரசூலை இழந்தவர்; சொர்க்கம், நரகம் இல்லை என்றவர்; கூன் (கொலை) செய்து பொதுப் பொருளை அழித்தோர்; புறுக்கானில் (திருக்குர் ஆன்) ஓரெழுத்தையும் இகழ்ந்தவர்; வல்லாண்மை பேசித் தம்மைப் பெருமை செய்து கொள்பவர்; நான்கு வேதங்களில் எதை