பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

செய்யிலே களையுண்டாககித்
தீங்கிலே விளைவுண் டாக்கிக்
கையிலே யிளித்தார் நேர்மைக்
கரும்பிலே கசப்பா மெனறார்"

இனிக்கும் கருப்பிலே கசப்புக் கலந்தால் கரும்பின் இனிப்புச் சுவை கெட்டு விடுகிறது. வளமாக வயலிலே வளர்நதுள்ள பயிர்களுக்கிடையே களைகள் கலந்து. வளர்ந்தால் விளைச்சல் வீணாகிவிடுகிறது. அதேபோன்று மெய்யிலே பொய்யைக் கலந்தால் மெய்யின் மேன்மை தன்மை கெடுகிறது. எனவே, பொய்மை நிறைந்த கொள்கைகளில் மெய்யைத் தேடுவது எங்ஙனம் பொருத்த முடைத்தாகும் எனக் கூறி, மிக உயர்ந்த நீதிக் கருத்தை உணர்த்துகிறது.

தான் கூறவந்த கருத்துக்களை சொல்லோவியமாகத் தீட்டிக்காட்டி படிப்போர் மனதில் ஆழமாகப் படியச் செய்வதில் இவர் பேராற்றல் பெற்றவராகத் திகழ்கிறார். வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களின் திருத்தோற்றத்தைக் கூறவந்த வண்ணப் பரிமளப் புலவர்,

"நகைமுகம் இலங்கும் வெள்ளை
       நனனிலா வீசும் மேனி
சுகமக ரந்த நாசி
       துலங்குகற் பூரத் தாலே
அகமிக மகிழ்ந்து வானோர்
      அனைவரில் அழக தானோர்
திகழொளி பரந்த வெள்ளைச்
      சிறகொடு வகைஎட் டுண்டே"

இவ்வர்ணனையைப் படிக்கும்போது வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களே நம் மனக் கண்முன் அழகோவியமாக காட்சி தருவது போன்று உள்ளது.