பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

மிகுந்த அழகானவள், நல்லவள், குறிஞ்சிப்புள்ளவள்.
மதுரவாக்குள்ளவள் வாடை மணமானவள், தலை
கனத்தவள், அவள் காலத்திலவளுக்கு நிகரில்லாதவள்
அப்பேர்க்கொத்த பெண் வேண்டும்"

என்கிறார்.

இவ்வாறு எல்லா வகைத் திறமைகளும் குண நலன்களும் ஒருங்கே அமையப்பெற்ற ஐந்து வயது வெள்ளாட்டிப் பெண் வேண்டுமெனக் கருதி, அவளைத் தேடும் பணியில் முனைப்புக் காட்டினார். இறுதியில் அவர் விரும்பிய தன்மைகள் அனைத்தும கொண்ட ஐந்து வயதுப் பணிப் பெண்ணை வணிகர் ஒருவர் மூலம செல்வந்தர் பெறுகிறார். அவளுக்குத் 'தவத்துது’ எனப் பெயரிட்டுத் தன் மகனை வளர்க்கும் வெளளாட்டிப் பணிப்பெண்ணாக அமர்த்திக் கொண்டார்.

அவ்விளம் சிறுமி மார்கக ஞானம் முழுவதையும் கணக்கு, பூகோளம் முதலான பிற துறை அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் கற்றுத்தேற, செல்வந்தர் வழிவகுத்தார். அப்பெண்ணின் துணையுடன் செல்வந்தர் மகன் பதுறுஸ்ஸமானும் பல்துறை அறிவும் நிரம்பப் பெற்றவனாக வளர்ந்து வாலிப நிலையை அடைகிறான்.

தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தை அடைந்த செல்வர் தன் மகன் பதுறுஸ்ஸமானை அழைத்து எல்லாவகைக் குணச் சிறப்பும் அறிவுத் தெளிவும் மார்க்க ஞானமும் நிரம்பப் பெற்ற பணிப் பெண்ணாகிய தவத்துது வெள்ளாட்டியை ஏற்றுக் கொள்ளுமபடி பணிக்கிறார். பதுறுஸ்ஸமான் தன் தந்தையான செல்வந்தரின் இறப்புக்குப் பின்னர், தன் தவறான போக்கால் தந்தை தேடித்தந்த செல்வம் அனைத்தையும் இழந்து வறியவனாகிறான். தன வாழ்க்கைத் தடம் புரண்டதால் இருந்தவற்றையெல்லாம் இழந்து கொடிய வறுமைவாய்ப்பட்ட பதுறுஸ்ஸமான்