பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

நலன்களைத் தெளிவாக எடுத்துக் கூறுவதாகவும் அமைந்துள்ளது நான்கு உலமாக்கள் விடுக்கும் வினாக்களும் அதற்குத் தவத்துது வெள்ளாட்டி தரும் பதில்களும் படிப்போர்க்குச் சுவையூட்டுவதோடு இஸ்லாமிய தகவல் களஞ்சியமாகவும் அமைந்துள்ள தெனலாம்.

இஸ்லாத்தின் அனைத்து அம்சங்களையும் வெளிக் கொணரும் வகையிலேயே நான்கு உலமாக்களின் கேள்விகள் அமைந்துள்ளன. முதலாவதாகக் கேள்வி கேட்ட உலமாஷெய்கு இப்றாஹீம் என்பர் 134 மசலாக்களை (கேள்வி) கேட்க அவற்றுக்குத் தக்க பதில்களை தவத்துது உடனுக்குடன் உரைக்க அவள் விடை தந்தத் திறனைப் புகழ்ந்த உலமா "இவள் இஸ்லாமிய மார்க்கத்தில் மிகுதமும் அறிந்தவளாயிருக்கிறதின் பேரில் உங்களெல்லாருக்குத் தெரியப் படுத்துகிறேன்" என்று சொல்லி தன் தோல்வியை ஒப்புக் கொள்கிறார். அடுத்துக் கேள்வி தொடுத்த ஷெய்கு அஹமது எனும் உலமா 174 மசலாக்களைக் கேட்டார்.. மூன்றாவது உலமாவான ஷெய்கு ரஹ்மத் என்பவர் 176மசலாக்களையும் இறுதியாகஷெய்கு அப்துல்லா கரீப் என்பவர் 185மசலாக்களையும் தவத்துது வெள்ளாட்டியை நோக்கி வினவ, அனைத்திற்கும் திறம் பட விடையளித்து தன் அறிவாற்றலையும் மார்க்க ஞான செழிப்பைபும் நிறுவி வெற்றி பெறுகிறாள்.

நூல் முழுவதும் உலமாக்கள் கேட்கும் கேள்விகள் "சுவால்' என்றும் , தவத்துது அளிக்கும் பதில்கள் ஜவாபு" எனவும் குறிக்கப்படுகின்றன. அரபி மொழியில் "சுவால்" எனும் சொல்லுக்கு வினா" எனவும் ஜவாபு எனும் அரபுச் சொல்லுக்குப் பதில்’ என்பதும் பொருளாகும்.

தமிழில் உள்ள மூன்று மசலாக்களிலும்பொருளடக்கத்தைப் பொருத்தவரை வெள்ளாட்டி மசலாவே முதலிடம்