பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

பட்டது என்ற குறிப்பு மட்டுமே கிடைக்கிறது. மற்ற இரு மசலா நூல்களை விட இந்நூலே அதிகமான பதிப்புகள் வெளிவந்துள்ளன. அதன் மூலம் ஏராளமான மக்கள் படித்தின் புறவாய்ப்பேற்பட்டுள்ளது.

1087 கண்ணிகளாக அமைந்துள்ள நாட்டு மன்னனின் மகள் மெஹர்பானுக்கும் அஹமது ஷா என்னும் மன்னன் மகன் அப்பாஸ் என்பாருக்குமிடையே நடைபெற்ற வினா-விடைகளைத் தருவதாக அமைந்துள்ளது.

நூறு மசலா நூலின் கடவுள் வாழ்த்துப் பகுதி வல்ல அல்லாஹ்வின் தன்மையைப் போற்றும் வகையில் அமைந்துள்ளது.

"கண்ணுமின்றி செவியுமின்றி
நலவாயுமின்றி மூச்சுமின்றி
பெண்னுமின்றி ஆணுமின்றி
ஒரு பேச்சுமின்றிமூச்சுமின்றி
ஊணுமின்றி உறக்கமுமின்றி
நல்லுயிர்க்குயிரா யிருப்பவனே
காணவொண்ணா முதலவனே
யாவும் காத்தருளும் ரஹ்மானே"

எனக் கூறும் ஆசிரியர் இறைவனின் தனித்துவச் சிறப்பை இனிதோ துகிறார்.

அடுத்து, நூல் வரலாறு விரிவாகக் கூறப்படுகிறது.

அஹமது ஷா என்னும் அந்துமான் நாட்டு மன்னன் பிள்ளைப் பேறின்றி நீண்ட காலம் வருந்துகிறான் திரண்ட பெருஞ்செல்வமிருந்தும் பிள்ளைப் பேறில்லா மன்னனுக்கு