பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

கிளை தோறும் முப்பது இலைகள் என்பது முப்பது நாட்களைக் குறிக்கும் அவற்றுள் பாதி கருப்பு பாதி வெள்ளை என்பது இரவையும் பகலையும் குறிப்பதாகும். ஐந்து பூக்கள் எனக் குறித்திருப்பது ஐவேளைத் தொழுகையைக் குறிப்பதாகும் இவ்வாறு விடுகதிர்ப் புதிர் போல அமைந்து படிப்போரை இன்புறுத்துகிறது நூறு மசலா.

இப்பாடலில் மற்றொரு நுட்பமான கருத்தையும் உட்பொதிந்து வைத்துள்ளார் ஆசிரியர். மரக்கிளைகளில் பச்சை பசேலென்ற இலைகளுக்கு இடையே ஐந்து ஐந்தாக மணமிக்க மலர்கள் வண்ண மலர்களாகப் பூத்துக் குலுங்குகின்றன. மரத்தின் பயனே பூவும் அதினின்று உருவாகும் காயும் கனியும் விதையுமாகும். வண்ண மலர்கள் மலருக்கு அழகூட்டுவதோடு பயனும் அளிக்கிறது. அவ்வாறே வண்ண மலர்களாகிய தொழுகைகள் மனிதனுக்கு மிகுபயன் விளைவிக்கின்றன என்பதை இலைமறை காயாக உணர்த்திவிடுகின்றார் நூறு மசலா ஆசிரியர்.

ஆயிர மசலா நூலிலும் வெள்ளாட்டி மசலா நூலில் கேட்கப்படும் பல கேள்விகளுக்கான விடைகள் திருமறையாம் திருக்குர் ஆனுக்கும் நாயகத்திருமேனியின் வாழ்வும் வாக்குமாக விளங்கும் ஹதீதுக்கும் ஏற்ற விளக்கங்களாக அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. ஆனால் நூறு மசலா அவைகளினின்றும் சற்று வேறுபட்ட நிலையில் திருக்குர் ஆன் ஹதீது செய்திகளைவிட பொது அறிவுக்கும் அன்றாட நடைமுறை வாழ்க்கைப் போக்குக்கும் அதிக முக்கி யத்துவம் அளிக்கிறது. மார்க்க நெறி விளக்கங்களுக்கு மாறாக தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைபற்றி விளக்கங்கள் கேட்டுப் பெறப்படுகின்றன. மேலும், முதலிரண்டு மசலாக்களில் இடையீடின்றி வினாத்தொகுத்து விடை பெறப்படுகின்றது. ஆனால், நூறு மசலாவில் தொடர்ந்து மசலா கேட்கப்படுவதில்லை. நாள்தோறும் சில கேள்விகளே கேட்கப்படுகின்றன. முதல் நாள் கேட்ட