பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

கேள்விக்கு மறுநாள் விடையளிக்கப்படுகிறது. இந்த நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு செய்திகளும் நிகழ்ச்சிகளும் சுவையுடன் விளக்கப்படுகின்றன. இந்த இடைவெளிகளில் மெஹர்பானின் அறிவும், வீரமும், செயல் திறனும் பெரிதும் வர்ணிக்கப்படுகின்றன. அவ்வாறே மெஹர்பானுவின் ஆற்றலும். அழகும் பெரிதும் போற்றப்படுகின்றன

மேலும், முந்தைய மசலா நூல்களில் கேள்வி கேட்பவர்களால் மட்டும் வினாக்கள் தொடுக்கப்படுகின்றன. ஆனால். நூறு மசலாவில் அம்முறை கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்படவில்லை பதில் கூறவந்த அப்பாஸே, மெஹர்பானை நோக்கி கேள்விகணைகளைத் தொடுத்து விடை பெறுகிறான். சான்றாக, அப்பாஸ், அழகு மங்கை மெஹர்பானை நோக்கி, தன் வாழ்க்கை ரகசியம் உள்ளடங்கிய கேள்வியொன்றைக் கேட்கிறான்.

"சொல்மசலாச் சொல்லக்கேள் என
     தோகை மயிலே குயிலே
நல்லதொரு அரசனுக்கு முன்னாள்
      நடு வயதில் மவுத்தடுத்து
மெல்ல நடந்தானவனும் பின்னர்
     மீண்டு மொரு மவுத்தடுத்து
பல்லுவாயும் நடுநடுங்கியொரு பாழ்க்
     கிணற்றில் கிழித் தெறிந்தான்
கிணற்றிலொரு மவுத்தடுத்துப் பின்னால்
     கிட்டிய மூன்றா மவுத்தில்
மணத்தரசன் வரிசைபெற்றான் அந்த
     வண்ணம்சேர் மும் மவுத்ததனை
கணக்குடனே மொழியு மென்றான்"

தன் பெற்றோருடன் அரசு துறந்து வெளியேறியது முதல் மவுத்து (இறப்பு) எனவும் கொடிய காட்டிடையே