பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

திருப்பதன் மூலம் உணர்ச்சி பூர்வமான பாடல்களோடு நம்மை ஒன்றச் செய்து விடுகின்றார்.

நூறு மசலா பாடல்களில் காணும் மற்றுமொரு சிறப்பு இந்நூலில் மிக அதிகமான உவமைகள் ஆசிரியரால் கையாளப்படுவதாகும். சொல்லவந்த கருத்தையும் உணர்வையும் இவ்வுவமைகள் அழுத்தமாக் உணர்த்தப் பெருந்துணை புரிகின்றன. அதிலும், மிக அதிகமாக அடுக்கு உவமைகளை ஆங்காங்கே திறம்படக் கையாண்டு இலக்கியச் செறிவேற்றுகிறார். சான்றாக இங்கே ஒரு பாடலைப் பார்ப்போம்.

தன் பெற்றோருடன் பகவீறு நாடு வந்த அப்பாஸ் அங்குள்ள மூதாட்டி ஒருத்தியைச் சந்திக்கிறான். அவள் மூலம் அந்நாட்டு இளவரசி மெஹர்பான் பற்றியும் அவள் தன்னை மணக்கவருவோரிடம் நூறு கேள்வி கேட்பதையும் தக்கவிடை தராதவர்கள் அவள் அளிக்கும் மரணதண்டனை பெறுவதாகவும் அறிந்து அவளைச் சந்தித்து அவள் கேள்விகட்குவிடை பகர்ந்து அவளை மன முடிப்பதாகக் கூறுகிறான். பலர் தோல்வியுற்று மரணத்தைத் தழுவிய இப்பயங்கர முயற்சியில் ஈடுபட வேண்டாம் என மூதாட்டி தன்னை தடுத்தும் கேளாத அப்பாஸ், முதல் நாள் மெஹர்பானு விடுத்த கேள்விக்குத் தக்க விடை பகர்ந்து மீண்டும் மூதாட்டியை அடைகிறான். வெற்றியோடு திரும்பிய அப்பாஸைக் கண்ட கிழவி வியப்பு மிக்கவளாய் அவனை ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்துக் கூறியதாக,

"சிங்கத்தின்முன் தப்பிவந்த கருந்தேக
    முள்ள ஆனைபோலும்
தங்குமயில் வாயிற்றப்பும் நெடுசர்ப்ப
    மது தன்னைப் போலும்