பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

சர்ப்பவாயில் தப்புகின்ற குளத்தவளை
                          யது தனைப்போலும்
செப்பிடுமா வேங்கையில் தப்புப்செம்
        மறியாடு ஆதனைப் போலும்

தூண்டிலே தப்புகின்ற சொல்லும்
       சுந்தரஞ்சேர் மீனைப் போலும்
சேண்டனிலார் வல்லூறுமுன் தப்பும்
       திருக்கொள் புறாவதனைப் போலும்

காறியுமி ழையத்திலேநின்று கடக்க
       வந்த ஈயைப்போலும்
மாறுமொழிந் தணுவளவும் ஈயாவம்பரி
        டம் நற்புலவோர்

பரிசுபெற்று வருதல்போலும் எல்லாம்
        படைத்தவன்தன் அருளினாலே
வரிகைப்பகு வீறரசன்பெற்ற மாதிடம்
        போய்மீண்டு வந்தாய்"

என இப்பாடலில் அடுக்கடுக்காக உவமைகளைப் பயன்படுத்தி இலக்கிய மெருகேற்றியுள்ளார்

ஆயிர மசலாவிலும் வெள்ளாட்டி மசலாவிலும் மிக அதிக அளவில் பெர்சிய, அராபியச் சொற்களைப் பயன்படுத்தப்பட்டிருக்க, நூறு மசலாவில் மிகமிகக் குறைவாகவே அரபிய, பெர்சியச் சொற்கள் கையாளப்பட்டுள்ளன காரணம், முந்தைய இரு மசலா நூற்களும் இஸ்லாமிய நெறிக்கும் செய்திகளுக்கு மட்டுமே முதல் முக்கியத்துவம் தந்திருந்தன. ஆனால் நூறு மசலாவோ பொது அறிவுக்கும் பாத்திரங்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளுக்கும் அதிக இடமளித்துள்ளன. எனவே, தேவையான இடங்களில்