பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

நின்றனர். இத்தகைய சூழ்நிலை, சைத்தானுக்குத் தன்கை வரிசையைக் காட்டும் சந்தர்ப்பமாக அமைந்தது. சைத்தானாகிய இபுலிசின் துணையோடு ஓர் உபாயத்தை மேற் கொண்டனர். எல்லோரும் தங்கள் இல்லம் ஏகியபோது, எதிர்பார்த்தவாறே அவர் தம் தந்தையார் 'இளைய மகன் ஈசுபு எங்கே? என வினவினார். பாவத்திற்கஞ்சா அச்சகோதரர்கள், தம்பி ஈசுபை காட்டில் ஓநாய்கள் கவர்நது சென்றுவிட்டதாக ஒத்த குரலில் துணிந்து பொய்யுரைத்தனர்.

இதே நேரத்தில், சிறுவர் ஈசுபு தள்ளப்பட்ட பாழுங்கிணற்றை அடுத்திருந்த நடைபாதை வழியே சென்ற வணிகக் கூட்டத்தினர், சற்று தூரத்தில் தங்கி இளைப் பாறலானார்கள். தாகத்தால் தவித்த அவர்களது ஒட்டகமொன்று தண்ணீர் குடிக்கக் கிணற்றைநோக்கிச்சென்றது அவ்வொட்டகத்தைப் பின் தொடர்ந்து சென்ற வணிகர் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கியிருந்த பாழும் கிணற்றினுள் நீர் இறைக்கத் தோண்டியொன்றை இறக்கினார்.

சகோதரர்களால் தள்ளப்பட்டு, மேலேற வழி தெரியாது கிணற்றினுள் தவித்துக் கொண்டிருந்த சிறுவர் ஈசுப் நீர் மொண்டு செல்ல இறங்கிய தோண்டியை இறுகப் பற்றிக் கொண்டார். நீர் இறைப்பவர் தோண்டியை மேலே தூக்க அஃது மிகவும் கனமாக இருந்தது. மற்றொருவரைத் துணைக்கழைத்து மேலே தூக்க தோன டியின் மேல் அமர்ந்தவராக சிறுவர் ஈசுப் மேலே வந்தார் இந்நிகழ்ச்சியை ஆசிரியர்.

"தோண்டிதனிற் கயிறு கட்டிவிட
       துய்யோனருட்படி சிபுறையிலும்
ஆண்ட ஈசுபைத் தோண்டியின் மேல்
      அவரை ஏற்றியே தூக்கிவிட்டார்