பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

எனத் தன் ஆதங்கத்தையும் எதிர்ப்பார்ப்பையும் கவலை தோய்நத குரலில் ஏக்கத்தோடு கூறியபோது என் உள்ளத்தில் ஒருவித சிலிர்ப்பு ஏற்படவே செய்தது அவரது கவலை மிகவும் நியாயமானதாகப்பட்டது அன்று முதல் என் உணர்வும் சிந்தனையும் அவர் கருத்து வழிச் செல்லத தலைப்பட்டது.

அதே ஆண்டில், சென்னை எஸ்பினேடு ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் நடைபெற்ற இலக்கியக் கூட்டமொன்றில் பேசி முடித்து அமர்ந்தேன். என் அருகில் அமர்ந்து கொண்டிருந்த திரு. கொத்தமங்கலம சுப்பு அவர்களிடம் அவரது நண்பர் ஒருவர் சற்று தாழ்ந்த குரலில் "என்ன ! சாயபு இவ்வளவு நல்லாத் தமிழ் பேசராறே!" என்று வியந்து கூறிப் பாராட்டி பேசினார். என்னைப் பொறுத்த வரை அது பாராட்டுரையாக என மனதுக்குப்படவில்லை இதயத்தில் விழுந்த குத்துபோல் இருந்தது. ஒரு தமிழ் நாட்டு முஸ்லிம் தமிழில் தவறின்றிப் பேசுவது வியப்பானதொரு நிகழ்ச்சியாக நினைக்க நேரிடுகிறதென்றால், நம்மைத் தமிழ்மொழிக்கு அன்னியமானவர்களாகக் கருதும் மனப்போக்கு வளர்ந்துள்ளதே அதற்குக் காரணம் என எண்ணி வருந்தினேன். தமிழ்மொழி, இலக்கிய, இலக்கண வளர்ச்சிக்குத் தமிழ் முஸ்லிம்கள் ஆற்றியுள்ள அரும்பணிகளை முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில், அவர்கள் உள்ளம் ஏற்கும் வகையில் எடுத்து சொல்வதன் மூலமே இந்தத் தவறான கண்ணோட்டததைப் போக்கவும் மாற்றவும் முடியும் என்ற உணர்வு என்னுள் அழுத்தமாக நிலை கொள்ளத் தொடங்கியது.

அச்சமயத்தில் நான் ஒய்.எம் சி.ஏ. பட்டிமன்ற ஆட்சிக் குழு உறுப்பினராக இருநததால், 'இஸ்லாமியப் புலவர் திருநாள்' என ஒரு நாளைக் கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டேன். ஆட்சிக் குழு உறுப்பினர்களும் செயலாளர் திரு கெ. பக்தவத்சலம் அவர்களும் இந்த யோசனையை உடனே ஏற்று, ஆண்டுதோறும் 'இஸ்லாமியப் புலவர்