பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

தரர்கள் அனைவரும் ஒன்றாயிணைந்தனர் என கிஸ்ஸாவை இனிது முடிக்கிறார் நூலாசிரியர் மதாறுப் புலவர் அவர்கள்.

இறைவழி வழுவா அற வாழ்வு வாழ்ந்த ஈசுபு நபி யின் வாழ்வை விளக்கும் 'ஈசுபு நபி கிஸ்ஸா' நூல் சிறந்த நீதி புகட்டும் படைப்பாகவும் திகழ்கிறது.

இந்நூல் விருத்தப்பாவால் ஆயது எனினும் 'தொங்கல்’ வன வழங்கும் செய்யுள் அமைப்பையும் உட்கொண்டதாக திகழ்கிறது

தமிழ்நாட்டு முஸ்லிம் பெருமக்களிடையே ஈசுபு நபி கிள் ஸா'வுக்கு அடுத்தபடியாக மக்களிடையே மிகுந்த செல் வாக்குப் பெற்றுத் திகழும் மறறொரு கிஸ்ஸா பேட்டை ஆம்பூரைச் சேர்ந்த அப்துல் காதர் சாஹிப் அவர்கள் இயற்றிய 'சைத்துள் கிஸ்ஸா’ எனும் நூலாகும். ஈசுபு நபி கிஸ்ஸாவினும் எளிய நடையில் அமைந்த சைத்துான் கிஸ்ஸா, சாதாரண தமிழறிவுள்ளவர்களாலும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் அமைந்துள்ள படைப்பாகும்.

இக்கிஸ்ஸாவின் கதையை மேலோட்டமாகப் பார்த்தால் வரலாற்றுத் தொடர்புடையது போன்று தோற்றமளிப்பினும் இதிலுள்ள கதை சம்பவங்களுக்கு ஆதார பூர்வமான வரலாற்றுச் சான்றுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஹனிப் என்பவர் அறிவாற்றல் மிக்கவர்: 'வீர நெஞ்சினர். அவரும் அவரது நண்பர்கள் நால்வரும் ஒருநாள் வேட்டை மேற்சென்றனர். இவர் வேட்டையாடிய காடு சைத்தூன் எனும் மங்கைக்குச் சொந்தமானதாகும். அந்நியர்கள் தன் காட்டினுள் அனுமதியேதுமின்றி வேட்டையாடுவதைக் கண்டு வெகுண்டெழுந்தாள் அவர்களோடு வெஞ்சமர் புரிந்தாள். சண்டையில் முஹம்மது ஹனிபு மயக்கமுற்றார் மற்றவர்களும் தோல்வியைத் தழுவவே,