பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்வாறு 1965முதல் 19, 5வரை பத்தாண்டு காலம் கொண்டாடினர் ஒவ்வொரு முறையும் விழாப் பொறுப்பை நானே ஏற்று விழா ஏற்பாடுகளையெல்லாம் செய்து கொடுத்து வந்தேன் ஒவ்வொரு ஆண்டும் மூன்று அல்லது நான்கு முஸ்லிம் தமிழ்ப் புலவர்களை பற்றி ஆராயும் சிறு கருததரங்கு போன்றே விழாக்கள் நடந்து வந்தன. பேச்சாளர்கள் முஸ்லிம்களும்-முஸ்லிமல்லாதவர்களும் சம அளவில் பங்கேற்றுச் சிறப்பித்து வந்தனர். இவ்வாறு பத்து ஆண்டுகளில் சுமார் 38 முஸ்லிம் தமிழ்ப் புலவர்களின் வாழ்க்கையும் அவர்தம் இலக்கியப் படைப்புகளும் முறையாகத் தக்க புலமையாளர்களைக் கொண்டு ஆயப்பட்டன.

இஸ்லாமியப் புலவர்களையும் அவர்தம் படைப்புகளையும் பரவலாக ஆய்வதைவிட குறிப்பிட்ட ஒரு முஸ்லிம் புலவரின் படைப்பை எடுத்துக்கொண்டு பல்வேறு சமயப் புலமையாளர்களும் ஆய்ந்தால் சிறப்பாக இருக்குமே என்று கருதி, 1975ஆம் ஆண்டில் புதுக் கல்லூரியில் "சீறாப் புராணம்" கருத்தரங்கை நடத்தினேன். இக்கருத் தரங்கில் தமிழகத்தின் புகழ்ப்பெற்ற புலமையாளர்களான மயிலை சீனி வேங்கட சாமி, டாக்டர் சிலம்பொலி சு. செல்லப்பனார், டாக்டர் கிருஷ்ணா சஞ்சீவி டாக்டர் சி. பாலசுப்பிரமணியம், டாக்டர் க.ப. அறவாணன், டாக்டர் எம்.எம். உவைஸ், மெளலவி எம். அப்துல் வஹ்ஹாப், கவி கா.மு. ஷெரீப் முதலாக பதினெட்டுப் பேர் பங்கேற்று வெவ்வேறு தனித்தலைப்புகளில் சீறாப் புராணத்தைத் திறம்பட ஆய்வு செய்தனர். அவ்வாய்வு தொகுப்பு நூலாக 'சிந்தைக்கினிய சீறா' என்ற பெயரில் வெளிவந்தது. அந்நூல் பின்னர், இலங்கைப் பல்கலைக் கழகததில் பாட நூலாகும் பெருமை பெற்றது.

இவ்வாறு, பல இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கருத் தரங்குகளை நடத்திய பின், ஒரு குறிப்பிட்ட இஸ்லாமிய துறைத் தொடர்பான முயற்சியாக 'தமிழில் இஸ்லாமிய