பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாமா இலக்கியங்கள்

தமிழில் முஸ்லிம் தமிழ்ப் புலவர்களால் கொண்டுவந்து சேர்க்கப்பட்ட மற்றொரு புதிய இலக்கிய வடிவம் 'நாமா' என்பதாகும். "நாமே என்ற பாரசீக மொழிச் சொல்லின் தமிழ் வடிவமே 'நாமா' வாகும். இதற்கு 'வரலாறு' என்று பொருள் கூறப்படுகிறது.

வாழ்வில் அருஞ்செயலாற்றிய பெரியார்களின் வாழ்க்கை வரலாற்றை அல்லது அவர்தம் வாழ்க்கை நிகழ்ச்சிக் கூறுகளை விளக்கிக் கூறும் இவ்விலக்கிய வடிவம் பாரசீக மொழி இலக்கிய அமைப்பை உட்கொண்டதாகத் தமிழில் புத்துருப் பெற்றுள்ளது எனலாம்.

தமிழில் சுமார் பதினாறு நாமா இலக்கியங்கள் இருந்த போதிலும் உலகப் படைப்பு வரலாற்றை விரித்துரைக்கும் 'நூறு நாமா'வும் பெருமானாரின் விண்ணுலகப் பயணத்தை விளக்கிக் கூறும் 'மிஃறாஜ் நாமா'வும், இறைவணக்கம் புரியாதோர் பெறப்போகும் இறைதண்டனைகளை சுவைபட விவரிக்கும் 'இருஷாது நாமாவும்' மரண வேதனைகளை அடிப்படையாகக கொண்ட 'சக்கறாத்து நாமாவும்' குறிப்பிடத்தக்க நாமா வகை நூல்களாகும்.

'நூறு நாமா' இலக்கியப்படைப்பு செய்யிது அஹ்மது மரைக்காயர் எனும் புலவரால் இயற்றப்பட்டுள்ளது. இவர் காயல்பட்டணத்தைச் சேர்ந்தவராவார். முடியா நின்ற உமறுதரு 'சீறாவை முடிப்பான் வேண்டி 'சின்ன சீறா' பாடிய பனீ அஹமது மரைக்காயரின் புதல்வர் என இவர் குறிக்கப்படுகிறார். ஆசிரியரின் நூற் குறிப்பின்படி இந் 'நூறு நாமா' நூல் இமாம் கஸ்ஸாலி பாரசீக மொழியில்