பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

இபுலீசு எனும் சாத்தானின் துர்ப் போநனையால். உண்ணக் கூடாதென இறைவனால் விலக்கி வைக்கப்பட்டிருந்த கனியை, இறைவனின் கட்டளையை மீறி உண்டதனால் அல்லாஹ்வின் கோபத்திற்காளானார்கள். இறை விருப்புக்கு மாறாக நடந்த ஆதாம் (அலை) அவர்கள் ஹிந்தீ எனும் தீவிலுள்ள மலைமேலும் ஹவ்வா. தாயார் அவர்கள் ஜித்தா எனும் நிலப்பகுதிக்கும் இறைவனால் தூக்கியெறியப்பட்டனர். மனித வரலாற்றின் தொடக்ககால இந்நிகழ்ச்சியை.

"அந்த உரையினிற் பயந்த ஆதமும்
      அரிவை ஹவ்வாவும் இருதிசையில்
வந்து பூமியில் வீழ்ந்தார்கள்
      மங்கை ஹவ்வாதாம் ஜித்தாவிலும்
ஹிந்தியெனும் தீவிலொரு மலையில்
        இவர் தன் கணவரும் பிரிவாகவே
அந்தி பகல் முந்நூறு என்னும்
      வருட மாகுமட்டும் தபசிருந்தார்"

எனக் கூறுகிறார் ஆசிரியர்.

ஹவ்வா தாயார் தூக்கியெறியப்பட்ட ஜித்தா நிலப் பகுதி அரபு நாட்டில் உள்ளதாகும். ஆதாம் நபியவர்கள் துாக்கியெறியப்பட்ட ஹிந்தீ தீவு இன்றைய இலங்கையாக இருக்கலாம். ஏனெனில், அங்குள்ள மலையொன்றின்மீது ஆதாம் நபி தூக்கி எறியப்பட்டதாகச் குறிப்பிடப்படுகிறது. இத்தீவிலுள்ள மலையொன்றின் உச்சிப் பகுதி இன்று 'Adam Mount' என முஸ்லிம்களாலும் கிருத்துவர்களாலும் கருதப்படும் ஆதாம் மலையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

'தொங்கல்’ எனும் செய்யுள் வடிவில் இந்நூல் இயற்றப்பட்டுள்ளதாக ஆசிரியரால் குறிப்பிடப்பட்டுள்ளது.