பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

இவ்வாறு ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரம் நபிமார்களும் முன்னுாற்றுப் பதின்மூறுை முறுசலீன்களும் அன்பியாக்கலும் நபிமார்களும் பின்பற்ற தொழுகை நடந்தது.

பின்னர், வானவர்கோன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபிகள் நாதரிடப் பால் நிறைந்த பாத்திரமொன்றை அன்புடன் நீட்டி, அதனைப் பருகுமாறு கூறினார். நன்றியுணர்வுடன் அதனைப் பெற்ற பெருமானார் சுவைமிக்க அப்பாலை பெரு விருப்புடன் பருகினார். சிறிது மிச்சப் பாலுடன் பாத்திரத்தை மீண்டும் வானவர் தலைவரிடம் தந்தார். ஜிபரீல் (அலை) அவர்கள் பாத்திரத்தில் இன்னும் கொஞ்சம பால் மீதமிருப்பதைக் கண்டு புன்முறுவல் பூத்தபடி பெருமானாரை நோக்கி, 'பெருமானாரைப் பின்பற்றும் உம்மத்துகளுள் அதாவது முஸ்லிம்களுள் சிலர் எரி நரகு ஏகுவர்' எனக் கூறினார். பால் முழுவதையும் பெருமானார் பருகியிருந்தால் முஸ்லிம்கள் அனைவரும் சொர்க்கம் புகும் வாய்ப்புக் கிட்டியிருக்கும் என்பதையும் விளக்கினார். இதைக் கேட்டுத் துணுக்குற்ற பெருமானார் மீண்டும் அப்பால் கலத்தைப் பெற்று மிச்சமுள்ள பாலையும் பருகி, முஸ்லிம்கள் அனைவருமே சுவனப் பெரும்பேறு பெற விரும்பி அப்பால் பாத்திரத்தை மீண்டும் பெறும் பொருட்டுக் கையை நீட்டினார். திரும்பவும பால் பாத்திரத்தை தர மறுத்த வானவர்கோன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வல்ல அல்லாஹ்வின் திருவுளப்படியே அனைத்தும் நடப்பதால் மீண்டும் பால் பாத்திரத்தை கேட்க வேண்டாமெனப் பணித்தார். இச்சம்பவத்தை,

"மலக்கு ஜிபுரீல் நபி பாலுண்ண
     மறுகபா என்றே மகிழ்ந்தார்.
துலக்கு முடபாலில் கொஞ்சம் மிஞ்சத்
     தூக்கி ஜிபுரீல் கையில் கொடுத்தார்