பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89

நான்காவதாக ஒரு அணியினர் இறைச் சந்நிதானம் வருகின்றனர் அவர்களின் தோற்றமே அவர்தம் வறுமைச் சூழ்நிலையை பறைசாற்றியது பரட்டைத் தலையும் பஞ்சடைந்த கண்களும் கந்தலாடையும் அவர்கள் கொடிய வறுமை வாய்ப்பட்டவர்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லின அவர்களின் தோற்றத்தை,

"பசியால் மெலிந்துடல் வடிவுகுன்றி
     படிமேல் அறிவற்று நினைவுமாறி
கொசியும் எம்மையே துனியாவிலே
    குதாவே படைத்து நீ விட்டதனால்
வசியாத் தொழுகையின் பரக்கை விட்டு
    வல்ல பெரியோனே வணங்கவில்லை
நிசமாய்ப் பணங்காசு நீ கொடாமல்
   நிலத்தில் எங்களை வைத்தாயென்பார்."

பசி, பட்டினியால் உடல் குன்றி, மற்றவர்களை யாசித்துப் பஞ்சைப் பராரிகளாய் கையேந்தி அலைந்து திரிந்து வாழ நேர்ந்ததால் இறை வணக்கம்புரிய நேரமோ மனமோ இல்லாமற் போய்விட்டது காலமெல்லாம் கவலையோடு வாழ நேரிட்ட எங்களுக்கு வளமான செல்வத்தை இறைவா நீ அளித்திருந்தாயேயானால், ஒரு வேளைத் தொழுகையும் விடாது ஒழுங்காய் இறைவணக்கம் செய்திருப்போம் என்ற வறியவர் கூற்றைக் கேட்ட இறைவன், மூசாநபி அவர்களை அவர் முன் வரவழைத்து வறுமையால் வாடியதால் வணங்க இயலாமற் போய் விட்டது எனக் கூறும் நீங்கள் ஈசாநபியைவிட வறியவர்களா? எனக் கேட்டு,

"பஞ்சைப் பரதேசி போலாகியும்
     பரிவாய் நடந்திட்டார் ஈசாநபி
அஞ்சி பயத்தொடு தொழுகை தன்னை
     அழகாய்த் தொடரவே தொழுதுவந்தார்."

எனக் கூறுவதாகப் பாடுகிறார் ஷாமுனா லெப்பை அவர்கள்.