பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

மூசா நபி அவர்கள் வறியவர்க்கும் வறியவராய் வாழ்ந்தவர். தன்னையே இறைவனாகப் பிரகடனப்படுத்திக் கொண்ட கொடுங்கோலன் பிர்அவ்ன் மன்னனை வணங்காது அவன் இழைத்த கொடுமைகளையெல்லாம் தாங்கிக் கொண்டு இறைநேசச் செல்வராய் அல்லாஹ் விதித்த இறை வணக்க முறையினின்றும் இம்மியும் பிசகாது ஒழுகியவர். அவரைச் சான்று காட்டியது கண்டு மறுமொழி ஏதும் கூறவழியற்றவர்களான ஏழையர், வணக்க முறை தவறியதற்கான இறை தண்டனையை எதிர் நோக்கியவர்களானார்கள்.

ஐந்தாவது அணியாய் வந்தவர்கள் நோயின் காரணமாக இறை வணக்கம் செழுத்தத் தவறியவர்கள். இறைவன் அளித்த நோயின் காரணமாக இறைவணக்கம் இல்லா தொழிய நேரிட்டது என்ற கூற்றைக் கேட்ட வல்ல அல்லாஹ், ஐயூப் நபி அவர்களை வரவழைத்து, சோதனை நிமித்தம் ஐயூப் நபியவர்கட்கு சொல்லொணாத நோய்த் துயரங்கள் ஏற்படட போதிலும் இறை வணக்க முறையினின்றும் இம்மியும் பிசகாது இறையை வணங்கி ஆண்டவனின் அன்பு நேசராய் மாநியிருந்ததை எடுத்துக்காட்டி,

"ஆனா ராகிலும் என்னுடைய
     அன்பர் தொழுகையை விட்டதில்லைக்
கோனான் புவிமீதில் உனக்கிப்படிக்
     கொடிய நோயை விட்ட துண்டா?
தானே படைப்பெலாம் ஆளும் நாயன்
    தானே கோபமாய் அவர்கள் மீதில்
வான மலக்கொடே ஏவல்செய்ய
   வலித்து நரகத்தில் விடுவார்களே”

என இறைவன் கூறுவதாகப் புலவர் பாடுகிறார்.

கொடிய நோய்த் துன்பத்தில் உழன்றபோதும் இறை வணக்கமுறை பிசகா ஐயூப் நபி வாழ்வை ஒப்பு நோக்க