பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

"உனக்குப் புவிமீதில் இப்படிநான்
      ஒடுங்க வருத்தமும் விட்டதுண்டோ?
கனக்கும் படியாக ஹவ்வாவைப்போல்
      கடின விடைஞ்சலும் விட்டதுண்டோ
மனைக்குள் வாழ்வினை மிகவளித்தேன்
     மகிழ்வும் பரக்கத்தும் மிகவுமீந்தேன்
தனக்குப் பெருமையாய் வீண்போக்கினாய்
    தக்கோன் முனிவினால் நரகிற்சேர்வாய்"

எனக் கூறி, படிப்போரை அச்சுறுத்துகிறார்.

ஏழாவது அணியாக அடிமைகளும் பணியாட்களும் எடுபிடிகளும் வந்து இறைவன் முன் நிற்பார்கள். தொழுகை முறையைப் பேணாது வானாட்களைப் போக்கிய அவர்களை நோக்கி, தொழுகை முறை பேணாமைக்கான காரணம் என்னவென வினவ, அதற்கு அவர்கள், தாங்கள் தங்கள் எஜமானர்களால் கொடுமையாக வேலை வாங்கப்பட்டதாலும் கடுமையாக உழைக்க நேர்ந்ததாலும்,தங்கள் விருப்பம்போல் நடக்கும் சுதந்திரம் தங்கட்கு இல்லாததலும் இறைவணக்கம் புரிய இயலாமற் போய்விட்டது. மேலும தங்களை இறைவன் அடிமைகளாய்ப் படைத்ததனால்தான் இவ்விழி நிலை எனக் கூறிய கூற்றுக்குப் பகரமாக இறைவன் இத்ரீஸ் நபியவர்களை அவ்வணியின் முன் காட்டி 'இறை தூதராகிய நபியவர்கள் எழுபது பேருக்கு அடிமையாய் இருந்து தொண்டுழியம் செயதிருக்கிறார். ஆனால், இறைவனை வணங்கும் தொழுகையை மட்டும் ஒருபோதும் விட்டதில்லை. இத்ரீஸ் நபியை விடவா நீங்கள் கடுமையாக அடிமைத் தொழில் ஆற்றியுள்ளீர்கள் எப்படியாயினும் இறைவணக்கமாகிய தொழுகையைக் கைவிட யாருக்கும் உரிமையில்லை. அப்பிழை செய்தோர் நரக வேதனையினின்றும தப்பவே முடியாது’ என இறைவன் எச்சரிக்கை செய்வதாக.