பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

அமைந்திருப்பது தொழுகையாகிய இறைவணக்கமே என்பதை மிக எளிதாக உணரச் செய்து விடுகிறார்.

இறை வணக்கத்தின் மேன்மையை விண்டுரைக்கும் அதே நேரத்தில் எத்தகையவராயினும் அவர் தொழுகை தவறின் நரக வேதனை எய்துவது உறுதி என்பதையும் எக்காரணம் கொண்டும் தண்டனையினின்றுல் தப்ப இயலாது என்பதை அழகாக தத்துவார்த்த அடிப்படையில் விளக்கி விடுகிறார் நூலாசிரியர்.

இந்நூல் ‘இர்ஷாத்’ என்ற அரபி நூலின் தமிழ் மொழி ஆக்கம் ஆகும். தமிழின் தன்மைக்கேற்ட யாப்பிலக்கண அமைத கெடாத பனுலாக்கியுள்ள ஆசிரியர் ஷாமுனா லெப்மை சொல்லும் முறையில் மூலத்தினும் பெருஞ்சுவையைத் தமிழ்ப் பனுவலில் தேக்கித் தந்துள்ளார் என்பது எண்ணத்தக்கதாகும்.

நாமா இலக்கியங்களில் முஸ்லிம் மக்களிடையே மிகப்புகழ் பெற்றதாக அமைந்திருக்கும் நூல் “சக்கறாத்து நாமா” எனும் இலக்கியப் படைப்பாகும். அரபுத் தமிழில் இயற்றப்பட்ட இந்நூலை பேட்டை ஆம்பூர் அப்துல் காதிர் சாகிபு அவர்கள் யாத்துள்ளார். இந்நூலில் அரபுத் தமிழில் நூறு பாடல்கள் அடங்கியுள்ளன.

மரணம் என்பது மனிதனால் தவிர்க்க முடியாத ஒன்று. இறைவன் விதித்த நெறிப்படி, தீன வழி ஒழுகி, இறைவனின் இன்னருள் பெற்ற நிலையில் இறப்பை எய்தாது மாறுபட்ட போக்கில் வாழ்ந்து, இறுதி நெருங்கிய நேரத்தில் மரண வேதனையில் மனித உள்ளம்படுகின்ற துன்ப நிலை அழகாகத் தொகுத்துரைக்கப்படுகிறது இந்நூலில்.

இறப்பின் இறுதிக்கோட்டில் நிற்கும்போது இறையருளை எண்ணி ஏங்கித் தவிக்காது. தொடக்கமுதல் எம் முறையில் வாழ்ந்தால் இறுதி நிலையில் மரண வேதனையிலிருந்து ஆறுதல்பெற்று அமைதி கொள்ளலாம் என்பதை