பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோட்டாறு தந்த ஞானியர்

பேராசிரியர் செ. பசுலு முகியிதீன், எம.ஏ

இந்நாளில் நாகர்கோவில் என வழங்கும் நகர்ப்பகுதி முழுவதுமே ஒரு காலத்தில் கோட்டாறு என வழங்கி வந்துள்ளது. 'கோடடாருன மும்முடி சோழபுரத்து நாகர் கோவில்' எனனும கல்வெட்டுத தொடரால இதனை உணரலாம். (T. A. S. Wol VI) பழையாறு எனப்படும் வளைந்த-கோட்டாற்றின் கரையில அமைந்திருப்பதால் இவவூரும கோட்டாறு எனப்பட்டது. கோட் டாற்றின கரையில் இருக்கும் ஊர் கோடடாறு எனப் பெயா பெறறது போலவே இப்பெயரும் அமைந்தது

'கொலலம் தோன்றிய கோட்டாறு' என்னும் பழமொழி ஒன்று வழங்கி வருவது கொண்டு கொல்லம் ஆண்டு தொடங்கிய போதே இவ்வூா தோன்றியிருககலாம் என்பர். எனவே, ஏறத தாழ 1155 ஆண்டுப பழமை இவ்வூருக்கு உண்டாகிறது கி. பி. 8 -ஆம நூறருணடில் தோன்றிய பாண்டிக் கோவை' எனற நூலிலும் 12ஆம் நூற்ருணடில் தோனறிய கலிங்கத்துப்பரணி" என்ற நூலிலும் கோட்டாறு குறிபபிடப்படுகினறது. கி. பி. 11ஆம நூற்ருணடில்-அஃதாவது இராசஇராச சோழன காலததில இவ்வூர் கோட்டாருன முமமுடிச் சோழபுரம்’ எனவும 15ஆம நூற்ருணடில்-அஃதாவது கேரள மனனா ஆட்சியில் இவ்வூா கோடாருன சோழ கோளபுரம் எனவும் வழங்கி யுள்ளது ஆங்கிலேயர் வருகைக்குப பின நாகர்கோவில என்பது நகர்ப்பெயராக ஆகிவிடட போதிலும. இநநகரின இதயமாகத் திகழும் அங்காடித் தெருபபகுதி முதல் முஸ்லிம பெருங்குடி மககள பெருக வாழும இளங்கடை என்னும் பகுதி வரையி லுமுளள பரந்த நிலப்பரப்பு இனறளவும கோட்டாறு எனற பெயராலேயே வழங்கி வருகிறது. இநநகரின மறறைய பகுதி மககள் தங்கள் ஊாப் பெயர் மாற இடம் கொடுதத போதிலும் இப்பகுதி மக்கள் மட்டும தங்களின வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊரின் பெயரைப் பொன்னேபோல் போறறி வநதுள்ளனர். இவ்வாறு போற்றிப் பாதுகாத்த பெருமை இங்கு வாழும் முஸ்லிம் பெருங்குடி மக்களுககே உரியது என்ருல் மிகையா

காது.

இங்குள்ள முஸ்லிம் பெருங்குடி மக்கள் சிறந்த பண்பும் பாரம்பரியமும் கொண்டவர்களாய் உலகளாவிய புகழ்பெற்றுத்