பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏮᏭ

என்பது ஞானியார் சாகிபு அப்பா அவர்கள் இறைவனைக் கண்ட காட்சி.

2. மேஞ ஹாஜியார் சாகிபு ஒலியுல்லா:- ஹாஜி செய்கு முகியித்தீனுல காதிரி என்பது இவர்களின் இயற்பெயர். மலபார் கண்ணனுார் காஜி செய்கு நூறுத்தீன் அவர்களின் ஐந்தாம் தலை முறையில வந்த காஜி செய்கு உமர் (ரலி) அவர்களின் மைந்தரான செப்கு முகியித்தீன் காதிரியர்மவி அவர்களின் பேரர். பாட்டனரான செய்கு முகியித்தீன் காதிரியர் மவி அவர்கள், ஹஜ்ரத கெளதுல் அஃலம் முகியித்தீன் ஆண்டகையவர்களின் பதின்னகாவது தலைமுறையில் வந்த ஹஸ்ரத் செய்யிது உதுமான் பக்தாதி அவர்களிடம் கிலாபத் பெற்ருர்கள். பின்னர் அவர் களிடமிருந்து வழி வழியே தீட்சை நடைபெற்று வருகிறது. பேரளுராகியமேளு ஹாஜியராவர்கள் ஷெப்காகவும் சூஃபிஞானி யாகவும் உலகப் புகழ் பெற்று விளங்கினர். இவர்களுடையவும் இவாகளின் வழித் தோன்றல்களுடையவுமான சீடாகள் பல்லா யிரக்கணக்கில் இந்தியாவில் தக்கலை, காயாமொழி, இரவன சமுத்திரம், சிவகாசி போன்ற ஊர்களிலும், இலங்கையில் கொழும்பு. அல்காமம், காலி, நிாகொழும்பு, கிந்தொட்டை பேராதெனி, உடுனுவாரு போன்ற பல்வேறு ஊர்களிலும் பரவ லாக உள்ளனர். கொழும்பு நகரில் உள்ள மஸ்ஜிது முகியித்தீன்’ எ னும் காதிரிய்யா தைக்கா இலங்கை வாழ் சீடர்களின் தலைமை நிலையமாக உள்ளது.

மேஞ ஹாஜியார் செய்கு முகியித்தீன் காதிரியவர்கள் ஹிஜ்ரி 1247இல் புனித ஹஜ்ஜுப் பயணம் மேற்கொண்டார்கள். கடல் கொந்தளிப்பின காரணமாக அவர்கள் பயணமான கப்பல் சிக்கலுக்குள்ளானது. தாமும் தம்முடனே சென்றவர்களும் இனி தே சென்று சிறையில்லம் அடைவான் வேண்டி அவனருளே நாடி ஒரு முளுஜாத்துப் பாடினர்கள்.

'அலலாவே றகுமானே அடியேன்மேல கிறுபை வைத்துப் பொல்லாத மஃசியத்தைப் போக்கி வைபபாய் அல்லாவே.’’ எனத் தொடங்கும் இது 14 கண்ணிகளைக் கொண்டது. அவற் றுள்ளே,

வகையான நபிமார்கள் வணங்கும் ஹஜ்ஜு கஃபாவில் தொகைஹிஜ்ரத் ஹம்ரக்லே தருவாய் மதலுயே."