பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix

வும் மெய்யறிவுத் தத்துவச் சுரங்கமாகவும் தேசிய உணர்வின் சின்னமாகவும் திகழும் அவர்கள் இளமை முதலே என் எழுச்சி உணர்வுகளுக்கு உந்து சக்தியாக விளங்கியவர்கள். உடல் நலிவால் இயலா நிலையிலும் என் விருப்பத்திற்குச் செவி சாய்த்து ஆர்வப் பெருக்கோடு அரிய முன்னுரையை வழங்கிப் பெருமைப் படுததினர்கள். நூலுக்கே முடிமணியாய்த் திகழும் அரிய முன்னுரை வழங்கிச் சிறப்பித்த அனஞர் அடுத்த திங்களே உலகை நீத்துச சென்றுவிட்டார்கள். அவர்கள் வாழ்வில் இறுதி யாக வழங்கிய இலக்கியக் கருத்துரை இதுவேயாகும் இவ் வாய்வுத் தொகுப்பை எனது பேராசானின் நினைவு அஞ்சலியாக வெளியிடுவதில் பேரமைதி பெறுகிறேன்.

இஸ்லாமிய இலக்கிய ஆராய்ச்சித் துறையின் முன்னேடி யாகத திகழும தீன் தமிழ்க் காவலர் பேராசிரியர் டாக்டர் ம. மு. உவைஸ் அவர்கள் வழங்கியுள்ள வாழ்த்துறை மேலும் பல விளக்கங்களே வழங்கி நம்மைச் சிந்திக்கத் துண்டுகிறது. எனது முயற்சிகளுக்கு அவ்வப்போது அரிய ஆலோசனைகளை வழங்கி எனக்குத் தோன்ருத் துணையாக விளங்கி வரும் ‘தீன் தமிழ்க் காவலர் அவர்கட்கு இதயம் நிறைந்த நன்றியைத தெரிவித்துக் கொளகிறேன.

இந்நூலுககு மிக அருமையான அணிந்துரையை வழங்கி யுள்ள உலமா பெருந்தகை மார்க்க ஞானச் செல்வர் மெளலவி மீ. இ. மு. அபுல் ஹசன ஷாதலி ஸாஹிப் (நூரிய்யி, பாஜில் பாகவி) அவர்கட்கு நான் எனறும கடபபாடுடையேன். எனது ஆக்கச் சிந்தனைகளுக்கு-அவற்றைச் செயல்படுத்த விழையும் முயற்சிகட்கு அனனா காட்டிவரும் ஆர்வமும் உற்சாக ஊக்க மொழிகளும் எனக்கு என்றும் புத்தெழுச்சி ஊட்டவல்லன. வாகும்.

மிகச் சிறந்த மதிப்புரையை வழங்கியுள்ள எனது அன்புச் சகோதரர் மெளலவி எம். அப்துல பத்தாஹ், பாகவி அவாகட்கு நனறி செலுத்தக கடமைப்பட்டுள்ளேன. குறை நிறைகளை சமன செய்து சீர்தூககும் கோல் போலமைந்த அவாதம் மதிப்புரை எல்லா வகையிலும் ஏற்றமுடைத்தாக ளிளங்குகிறது நூலுள் புகமுனையும் வாசர்கட்கு வழிகாட்டும் ஒளி விளககாக அஃது அமைந்துள்ளதெனினும் அஃது மிகையன்று.

எனது உணாவுகள் செயல் வடிவு பெறும் வகையில் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டி வரும நணபர்களே-குறிப்பாக