பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

திருக்காரண அஹ்மதிய்யாமாலை 2+108 பாடல்களால் அஹமதுல் கபீறு நாயகத்தினைப் புகழ்வது, இவர்களைப் பற்றியும் தமிழிலக்கியங்கள் குறைவே 46.

புலவர் ஞானியர்களிடை காதிரியா தரீகாவை நிறுவிய "முஹையயத்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களையும், நாகூ ரொலியினையும் பாடிப்பரவும் பாமரபு காணக் கிடைக்கிறது. அல்ஹாஜ் ரஹ்மத்துல்லாவை கோட்டாறு ஞானியாரப்பா பாடி யுள்ளார்.

திருக்காரணப் பதங்கள் பதினென்றும், இசைப்பாடல்களால் ஷாஹீல் ஹமீதொலியின் இனபுகழ் இசைக்கினறன. நாகூர் ஹமீதொலி நாயகப் பதிகம் 1+10 பாடல்களால் ஆயது. "கன்ஜுல்கருமாத்து மாலை' என்பது நாகூர் நாயகத்தின் மிஞ்சு புகழினை 1-252 பாடல்களில் உவந்தேத்துகிருர்,

"திருத்தோத்திரக் காரணமாலை', 64 பாடல்களால் முஹியித் தீனே' எனப் பாடிப்புகழும் நூல்.

"வாஹிதிய்யா மாலை', 'முஹியித்தீனே: என அழைத்து 68 பாடலகளில ஞானம் பகருகிறது.

குரு யார்? கு-அறியாமை: ரு = மாற்றுபவர் எனப் பொருள் படும் அறியாமையினை-அஞ்ஞான வேரறுத்து மெய்ஞ்ஞான போத மூட்டுபவர். குரு = மன இருளைப் போக்கும் ஞானவிளக்கு. மஅரிபா அறிவு அள்ளி வழங்குபவர். உணர்வு உணவு ஊட்டு பவர். யார் குரு? வினவிற்கு பதிலாக 'கழிம்பென்ற மலக்கசடறு அறுக்குங் குரு?’ என (அஹதத்து மாலை 27) கலைமானுல் காதிரி தருகிருர். அத்தகு மெய்குருவினை 'வாழியாயைம்பத் தொன்ருன பொருள் வர்ண குருவடி விளக்கம்’ என திருத்தோத்திர குருவடி மாலே'யினை 51 பாடலகளில பாடியுள்ளார்.

அடைக்கல மாலை-ஆதியிடம் தன்னை அடைக்கலப் படுத்தும் பதினெட்டு பாடல்களால் ஆயது. அடைக்கலமாகும் தன்மை ஞானிகளின் அரும் பணபுகளில் ஒன்றன்ருே!

றகுமான் (68), பராபரமே (55), நியாயமே (51)எந்நாளோ (31), தாபரமே (25), எக்கால (66), மனேன்மணி (24) கண்ணிப் பாடல்கள், புலவர் ஞானிகள்-சித்தர்கள் பாமரபுப் போற்றும் பாடல்களாக பாடியுள்ளமை காணலாம். அவைகள் ஞானம் பகருவன, எளிமை, இனிமை, இயல்புடையன.