பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

அஃலம் முஹையத்தீன் அப்துல்காதர் ஜீலானி(கி.பி 1078- 1166) அவர்களின் புகழ் பெருமை பாடுவதும் இம் முளுஜாத்து.

து ஆ இரப்பு

ஆசிரிய விருத்தம் 1; பஃருெடை வெண்பா. இவைகள் இறை வனிடம் இறைஞ்சும தமிழ்ப் பிரார்த்தனமாலை, நபிமார்களுக்கு அளித்த பலவேறு பேறுகளை-நல்லருள் நிகழ்ச்சிகளை-வேத மருளியதைக் கூறியும் துஆ இரக்கின்ருர், ஆதம்முதல் ஆரம் பிக்கினருர். இப்பா மரபும், புலவர் ஞானிகளிடம் காணப்படும் ஒன்ருக இருக்கிறது. ஒரு சில அழகு அடிகள் காண்போம்.

"இபுருஹிம் கன்னபிக்கு எரிநெருப்பைப் பன்னீராய் புவிமீதில கொடுத்த புண்ணியனே-ஹபீபான இஸ்மாயில் கனனபிக்கு இடரும் கருவியைஉன் வசமாகக் காத்தருளும் வல்லவனே- திசமாக ஸ்ககரியா கன்னபியைத் தருவினுள்ளேவைத்து முக்கியமுடன் காத்தருளும் வேந்தனே.”

இங்ங்னமாகப் பாடும் பாவணமை கற்றுணரத்தக்கது. பிழை பொறுககத் தேடுகையில் பாவியாக-புல்லளுக-பொய்யனுகநின்று இரந்து-கசிநதுருகி இறைஞ்சுகிருா.

இரணம்” எனற சொல்லை முஸ்லிம் புலவர்கள் மட்டுமே தம் பாடல்களில் வழங்கக் காணலாம். அது ரிஸ்க்" என்ற அரபிச் சொல்லிற்குரிய தனிப் பொருள்தரும் திருமிகு தமிழ்ச் சொல் லாய் அமைந்து விட்டது. ரிஸ்க் = ஆகாரப் பொருட்கள் அத்தனை யும உட்பெறும்). சோலி-ஜோலி-வேலை எனும் பழகு தமிழ்ச் சொல்லையும் பயன் படுத்தியமை காணலாம்.

மெய்ஞானக் கும்மி:

கும்மி-நாட்டுப்புறப் பாடல் வகையைச் சார்ந்த இலக்கிய மரபுடைய பாவகை. கருத்துக்களை எளிய முறையில் இசையோடு தருவது. இதனைப் பெண்கள் இலக்கியம்’ எனலாம். ஏனெனில் பெண்கள் பாடி ஆடுவதற்குரியதாக அமைந்துள்ளன. மேலும் ஞானம் பகரும் குமமிப் பாடல்கள் பெண்களும் ஞானத்தை அறிதற்கு விரும்பத் துணைசெயத் தோன்றியதோ என்ற விளுவும் எழுகிறது". ஞானக் கும்மிகள் தமிழிலக்கியத்தில் பல அழகுக்கு அணிசெய்கின்றன.

ஞானக் கும்மி ஞான சூட்சுமங்களை உட்பொதிந்து உயரிய அரிய ாைனங்களைத் தருவது. உட்பொருளறிந்து கொள்ளல்