பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரங்குடி ஷெய்கு தர்வேஸ் மீரானெலி

இலக்கி வானிலே பல முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் அறியப் படாத இருக்கின்றனர். அவர்களுள் முற்றும் துறந்து, இறை யினைப் பற்றியொழுகிய தவச்செம்மலாக - தியானத்திலும் மோனத்திலும் தொழுகையிலும் ஈடுபட்டுத் தன்னையே உயர்த்திக் கொண்ட நாதாவாக-ஞானம்-பக்தி-யோகம் ஆகியவற்றின் மூலம் முக்திபெற்று-உள்ளும்புறமும் ஒளி பெற்று இலங்கும் இறையன்பர் சூரங்குடி புலவர் ஞானி மீரானெலி அவர்களின் அறிமுகப்பாங்கில அமைவுறுவது இக்கட்டுரை.

சூரை என்னும் ஒருவகைக் கொடிகள் அழிக்கப்பெற்று மக்கள் குடியேறியது. குமரி மாவட்டத்தின்கண் அமைந்த சூரங்குடி என்னும் நலலூர். இப்பதியிலே ஹிஜ்ரி 1085 இல் அரபி நாட்டி லிருந்து வந்துறைந்து, ஹிஜரி 11:21, ஜமாதுல் ஆகிர் 13இல் மறைந்தும் மங்காச் சுடரொளியுடன் இலங்குபவர் மகான் செய்கு தர்வேஸ் மீரானெலி அவர்களாவார். இவர்தம் இயற்பெயர் ,ஷெய்கு மீரான்,. தர்வேஸ்' எனபது அன்னரது சிறப்பு அடைமொழிப் பெயர். இவர்தம் வாழ்க்கை வரலாறு முற்ற முழுதும் தொகுக்கப்படவில்லை. பாடிய பல பாடல்களும் ஏட்டுச் சுவடியாகவே பல்வேறு இடங்களில உள. அவற்றினை எல்லாம் தொகுத்து-ஒன்று சேர்த்துப் புதுப்பித்தல், நமது தலையாய இனறியமையாத கடகுைம்.

இப்புலவர் ஞானியைப்பற்றி அன்னரது பாடல்களிலிருந்தே அறியக் கிடைக்கும் வாழ்க்கை (Blo-Data) குறிப்புக்களாவன. 'சாதி மரபினிலுதித்த அபுசாலீகின் மகமே தமியேன்' (சூரிசனைப் பத்து பாடல் (1) எனும் அகச்சான்று அவர்தம் தந்தையார் பெயரினைச் சான்று பகருகிறது. அறபி நாடதில் நின்னுறை சூர நன்னகரில் பேறு பெயர்மீரான்’ (நாகூர் ஷாகுல் ஹமீது புகழ்பாடல் (9) என்பது அவர்கள் அரபு நாட்டவர் என்பதற்குச் சான்ருகும். வேதத்திலுயர் கோடை சற்குருவான தான் தன் ஹம்ஸாவெனும் ஷெய்கு"Iமுஹிய்யத்தீன் முளுஜாத்து