பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

ஒர்ந்துணர்ந்தறிந்திருந்தார்கள். தொழுகை, திக்று போன்ற வற்றினூடே இக்கலையின் துணைகொண்டு, மனமொன்றி-இறைத் தேடலிலும்-முடுகுதலிலும் வெற்றி கண்டனர் என்பது கணகூடு, மீரானெலியாரும, பிற தமிழகத்துப் புலவர் ஞானியர்களான "பீரப்பா', குணங்குடியார்’ ‘ஞானியாரப்பா, 'பoரொவி' போன்ருேரின் வாழ்வும் வாக்கும் யோக தத்துவம். (yoga Philosophy) பற்றிய அருங்கருத்து வளங்களைத் தருவனவாய் அமைந்துள்ளன. அவற்றினை ஒழுங்கு படுத்தி வெளிக் கொணரு வது நமது தலையாய கடமையாம்.

குமரி மாவட்டத்தில் குரங்குடி சூழ் பகுதிகளெல்லாம் இஸ்லாமியமும். அதன் ஞான போதமும் தழைத்தோங்க. பக்தித் தொண்டு புரிந்தோர்களுள மீரானெலி குறிப்பிடத் தக்கவராகத் திகழ்ந்தார், இஸ்லாமிய சூஃபி ஞான இலக்கிய வளர்ச்சிக்கும் இவர் ஆற்றிய அரும்பணிகள் மறத்தலாகாது. அவர்தம் வாழ் வும் வாக்கும் தொகுப்போம்; வகுப்போம் நல்வழி!