பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii

யெல்லாம் உலகுக்கே பொதுவானதாகக் காட்டுவதுதான் . அந்த நிலையை இஸ்லாமியத தமிழ்ப் பாவலர்களும் பின்பற்றினர் கள் என்பதைக காண்கிருேம. ஆனல் ஏதோ இந்த நாட்டின் கெட்ட காலம் இந்த நூலகளோடு பழகும வழக்கம் குறைந்து வந்து மறைந்தே போயிற்று. புதிதாக முயலுமபோது அநத நூலகளில் இருக்கிற அரபிபோன்ற மொழிச் சொற்கள் அந நூலகளைப் படிப்பதற்குப் பெரும் தடையாகத தோன்றின. ஆனல் மற்ருெருவகையில இஸ்லாமிய மதத்திற்கும் இந்து சமுதாயத்திற்குமுள்ள தொடர்பு நிலைத்து வந்தது.

வெறும் கொள்கைகளையும் சடங்குகளையும் வற்புறுத்து வோரே இந்த உலகத்தில் மிகுதியானவர். ஆனல், சமயமோ கடவுளோடு நாம் உறவு கொண்டு அந்த அனுபவத்தில் திளைத்து வாழ்வதேயாம. அத்தகையவர்கள்தான் அனுபூதிமான்கள், மெய்ஞ்ஞானிகள், சூஃபிகள் (Mystles), சிததர்கள் என்று பெயர் பெறுவர். இவர்கள் எந்த மதத்தவர்களாயினும் அவர்கள் அனுபவததைக காணும்போது, அடிப்படையில் ஒற்றுமையே காண்கிருேம் மொழி, மொழியில வரும் பெயர்கள் அவரவர் களின் பழகக வழக்கங்கள் மாறுபடலாம். ஆலை, அடிப்படை அனுபவம் மாறுவதில்லை. செயிண்ட் தெரஸா, ஜலாலுத்தீன் ரூமி, நம்மாழ்வார், மணிவாசகர், பதினெண சித்தர்கள் முதலியோர்களின் நூலகளை இந்தக் கண்கொண்டுபார்த்தவர்கள் இந்த ஒற்றுமையை வற்புறுத்தி மேட்ைடிலும் கீழ் நாடுகளிலும் எழுதி இருக்கிருள்கள். பதினெண் சித்தர்களில் இஸ்லாமியர் களும் இருப்பதைக் காணலாம்.

குணங்குடி மஸ்தான் பாடல்கள் இந்துக்களின் பாடல்கள் போலவே இந்துக்கள் பாடி:மகிழ்கிருர்கள். இஸ்லாமிய மெய்ஞ் ஞானிகள் அலலது சூஃபிகள் பாடும்போது பல இந்து மதச் சொற்களேயும் பயன்படுததி இந்துககளும் இந்த உணமைகளை உணர வேண்டுமெனற பரந்த நோக்கில் பாடியுள்ளாாகள். ஆளுல் சித்தாகள் பாடல்களையோ இந்து மதத்தில் உயர் நிலையில் இருப்போர் படிப்பதிலலை, பொது மக்களிடையேதான் அந்தப் பாடல்கள் நாடோடிப் பாடல்கள்போல அன்ருட வாழ்வில் பரவி இருககினறன. அதனல், இந்த உணமையை எடுத்து விளக்க வேணடியிருக்கிறது. அத்தகைய முயற்சியில எனது நணபா திரு. மணவை முஸ்தபா அவாகள் ஈடுபட்டு தமிழில இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள் எனற கருததரங்கைநடத்திஞர்கள். திரு, மணவை முஸ்தபா தமிழறிவு நிறைந்தவர்: நவல தமிழ்த் தொண்டர்; ஆலை, வெறியா அல்ல. இந்திய நாட்டு ஒருமைம்